கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட 8 பேர் கைது ; பெருமளவில் கசிப்பு கைப்பற்றல்!

21 Oct, 2025 | 12:13 PM
image

கரடியனாறு, கொக்கட்டிச்சோலை, காத்தான்குடி, வாகரை ஆகிய நான்கு பொலிஸ் நிலையங்களுக்கு கீழ் உள்ள பிரதேசங்களில் கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனையில்  ஈடுபட்ட வந்த இடங்களை நேற்று திங்கட்கிழமை (20) முற்றுகையிட்டபோது 8 பேரை பொலிஸார் கைது செய்ததுடன் 503 அரை லீற்றர் கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்தி செய்ய பயன்படுத்தும் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள வேப்பவெட்டுவான் காட்டை  அண்டிய பகுதியில் சட்டவிரோதமாக  கசிப்பு உற்பத்தி இடம்பெற்று வருவதாக மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்று குறித்த பகுதியை முற்றுகையிட்டபோது அங்கு கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவரை 380 லீற்றப் கசிப்புடன் பொலிஸார் கைது செய்தனர்.

தொடர்ந்து, பட்டிருப்பு பகுதியில் கசிப்பு உற்பத்தி செய்து வரும் நிலையத்தை கொக்கட்டிச்சோலை பொலிஸார் முற்றுகையிட்டபோது அங்கு கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 2 பேரை கைது செய்ததுடன் 114 லீற்றர் கசிப்பை கைப்பற்றினர்.

இதனைத் தொடர்ந்து காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி பிரதேசத்தில் சட்டவிரோதமாக கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை 3 லீற்றர் கசிப்புடன் கைது செய்தனர்.

வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள கதிரவெளி பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டவேளையில் 3 பேரை 6 அரை லீற்றர் கசிப்புடன் பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களை வாழைச்சேனை, மட்டக்களப்பு ஏறாவூர் நீதிமன்றங்களில் இன்று செவ்வாய்க்கிழமை (21) ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக அந்தந்த பொலிஸ் நிலையங்களின் பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நிபந்தனையற்ற நீதி...

2026-04-21 14:58:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் அரசியல்...

2026-04-21 14:50:48
news-image

'கஞ்சிபானை இம்ரான்' உடன் தொடர்புடைய முக்கிய...

2026-04-21 14:49:33
news-image

வவுனியாவில் டித்வா புயலினால் பகுதியளவில் சேதமடைந்த...

2026-04-21 14:49:11
news-image

கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை 

2026-04-21 14:05:10
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : தற்போதைய...

2026-04-21 13:29:54
news-image

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர...

2026-04-21 13:03:48
news-image

“7 ஆண்டுகள் கடந்தும் கிடைக்காத நீதி!"...

2026-04-21 12:54:12
news-image

இன்றைய நாணய மாற்று விகிதங்கள்

2026-04-21 12:50:39
news-image

நீதியை நிலைநாட்டுவதில் அசமந்தப்போக்குடன் செயற்பட்டால் சர்வதேச...

2026-04-21 13:05:57
news-image

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் 7ஆவது...

2026-04-21 12:15:57
news-image

மட்டக்களப்பில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்...

2026-04-21 12:12:12