யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 1987ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட 68 பேரின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல் வைத்தியசாலையில் இன்று (21) அனுஷ்டிக்கப்பட்டது.
இந்நினைவேந்தல் நிகழ்வில் வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர் த.சத்தியமூர்த்தி, வைத்தியசாலை சமூகத்தினர் மற்றும் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது உயிரிழந்தவர்களின் உருவப்படங்களுக்கு நினைவுச்சுடர் ஏற்றப்பட்டதுடன், மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் நோயாளிகளுக்கு சக்கர நாற்காலிகளும் வழங்கிவைக்கப்பட்டன.
1987ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட தாக்குதலில் வைத்தியசாலை பணியாளர்கள் 21 பேர் உட்பட 68 பேர் படுகொலை செய்யப்பட்டதுடன் பலர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM