இஷாரா செவ்வந்திக்கு உளவு பார்த்த பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூவருக்கு விளக்கமறியல்!

21 Oct, 2025 | 10:22 AM
image

பொலிஸாரின் நடவடிக்கைகள் குறித்து உளவு பார்த்து இஷாரா செவ்வந்திக்கு தகவல் வழங்கியதாக கூறப்படும்  பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “மத்துகம ஷானின்” சகா உள்ளிட்ட மூவரை எதிரவரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் சந்தேக நபர்கள் மூவரும் கைதுசெய்யப்பட்ட நிலையில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

சட்டத்தரணிகள் போன்று வேடமணிந்து நீதிமன்றத்துக்குள் நுழைந்த இஷாரா செவ்வந்தி உட்பட இருவரே “கணேமுல்ல சஞ்சீவ” என்பவரை சுட்டுக்கொலை செய்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்தது. 

இதனையடுத்து, இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த நிலையில் நேபாளத்தில் வைத்து ஒக்டோபர் 14 கைதுசெய்யப்பட்டார். 

நேபாள அரசாங்கத்தின் உதவியுடன் இலங்கை பொலிஸார் மற்றும் சர்வதேச பொலிஸார் இணைந்து மூன்று நாட்களாக நேபாளத்தில் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது இஷாரா செவ்வந்தி இவ்வாறு கைதுசெய்யப்பட்டார். 

இஷாரா செவ்வந்தியுடன் “கம்பஹா பபா” , “ஜேகே பாய்” உட்பட மேலும் பலர் கைதுசெய்யப்பட்டிருந்தனர். 

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி உட்பட அனைவரும் நாட்டுக்கு அழைத்துவருவதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் இருவர் ஒக்டோபர் 15 நேபாளம் நோக்கி பயணித்து அவர்களை இரவு நேரத்தில் நாட்டுக்கு அழைத்துவந்தனர். 

நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட இஷாரா செவ்வந்தி உட்பட அனைவரும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இயன்றளவு...

2025-12-11 21:45:47
news-image

பேரிடர் நிவாரணம் மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு...

2025-12-11 17:47:41
news-image

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டோருக்கு கடன் மீள் செலுத்தல்...

2025-12-11 21:42:59
news-image

டெஸ்ஃபெரிஒக்சமின் மெசிலேட் ஊசிமருந்துக் குப்பிகள் விநியோகிப்பதற்கு...

2025-12-11 17:23:43
news-image

மாலைதீவு மற்றும் இலங்கையிடையே விளையாட்டு மற்றும்...

2025-12-11 17:16:22
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்குThilakawardena Textile...

2025-12-11 20:58:44
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு10 மில்லியன்...

2025-12-11 20:57:03
news-image

கொழும்பில் உள்ள இராஜதந்திரிகளின் தனிப்பட்ட நிதியிலிருந்து‘Rebuilding...

2025-12-11 20:51:51
news-image

மன்னார் மற்றும் முள்ளிக்குளம் பிரதேசங்களில் 50...

2025-12-11 17:27:59
news-image

இலங்கையின் கரையோர மற்றும் சமுத்திரச் சுற்றாடலில்...

2025-12-11 17:15:58
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Maga...

2025-12-11 19:48:08
news-image

அரசின் அனர்த்த மீட்பு நிதியத்துக்கு இரண்டு...

2025-12-11 19:41:49