(நெவில் அன்தனி)
இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் நவி மும்பை டி வை பட்டில் விளையாட்டரங்கில் இன்று திங்கட்கிழமை (20) நடைபெற்ற ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை 7 ஓட்டங்களால் பரபரப்பான வெற்றியை ஈட்டியது.
இந்த மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை ஈட்டிய முதலாவது வெற்றி இதுவாகும்.
கடைசி இரண்டு ஓவர்களில் பங்களாதேஷ் 5 விக்கெட்களை ஒரு ஓட்டத்திற்கு இழந்ததால் அதன் வெற்றிக்கான முயற்சி கைகூடாமல் போனது.
சமரி அத்தபத்துவின் கடைசி ஓவரின் முதல் நான்கு பந்துகளில் ஒரு ரன் அவுட் உட்பட 4 விக்கெட்கள் வீழ்ந்தன.
இந்தத் தோல்வியை அடுத்து அரை இறுதி வாய்ப்பை பங்களாதேஷ் இழந்தது.
அதேவேளை, இலங்கையின் நிகர ஓட்ட வேகம் எதிர்மறையாக இருப்பதால் அதற்கு அரை இறுதிக்கு செல்லும் வாய்ப்பு இல்லை.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை 48.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 202 ஓட்டங்களைப் பெற்றது.
விஷ்மி குணரட்ன முதலாவது பந்திலேயே ஆட்டம் இழந்து வெளியேறினார்.
இதனை அடுத்து அணித் தலைவி சமரி அத்தபத்துவும் ஹர்ஷித்தா சமரவிக்ரமவும் 2ஆவது விக்கெட்டில் 72 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை நல்ல நிலையில் இட்டனர்.
சமரி அத்தபத்து 46 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். இதில் 6 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் அடங்கி இருந்தன.
அதற்கு அரை இறுதிக்கு செல்லும் வாய்ப்பு இல்லை.
அவரைத் தொடர்ந்து மேலும் 2 விக்கெட்கள் குறைந்த எண்ணிக்கைக்கு வீழந்தன. (100 - 4 விக்.)
எனினும் ஹசினி பெரேராவும் நிலக்ஷிக்கா சில்வாவும் 5ஆவது விக்கெட்டில் 74 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை கௌரவமான நிலையில் இட்டனர்.
நிலக்ஷிக்கா சில்வா 37 ஓட்டங்களைப் பெற்றதுடன் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 8ஆவதாக ஆட்டம் இழந்த ஹசினி பெரேரா 13 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 85 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் ஷொர்னா அக்தர் 27 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ரபேயா கான் 39 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட 203 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 195 ஓட்டங்களைப் பெற்று 7 ஓட்டங்களால் தோல்வி அடைந்து.
முதல் 3 விக்கெட்களை 44 ஓட்டங்களுக்கு இழந்ததால் பங்களாதேஷ் பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டது.
எனினும் ஷர்மின் அக்தர், அணித் தலைவி நிகார் சுல்தானா ஆகிய இருவரும் பொறுப்புணர்வுடன் துடுப்பெடுத்தாடி 3ஆவது விக்கெட்டில் 82 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது துரதிர்ஷ்டவசமாக ஷர்மின் அக்தர் உபாதைக்குள்ளாகி தற்காலிக ஓய்வுபெற்றார். அவர் அப்போது 64 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
தொடர்ந்து நிகார் சுல்தானாவும் ஷொர்னா அக்தரும் அதே விக்கெட்டுக்காக மேலும் 50 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது அக்தர் 19 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
சற்று நேரத்தில் ரிட்டு மோனியும் 7 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். (193 - 5 விக்)
கடைசி ஓவரில் பங்களாதேஷின் வெற்றிக்கு 9 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
கடைசி ஓவரை வீசிய சமரி அத்தபத்து முதல் பந்தில் விக்கெட் ஒன்றைக் கைப்பற்றியதுடன் அடுத்த பந்தில் மேலும் ஒரு வீராங்கனை ரன் அவுட் ஆனார்.
கடைசி 4 பந்துகளில் பங்களாதேஷின் வெற்றிக்கு மேலும் 9 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
அதுவரை மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த நிகார் சுல்தானா 77 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் அத்தபத்துவின் அடுத்த பந்தில் ஆட்டம் இழந்தார்.
அத்துடன் பங்களாதேஷின் வெற்றிக் கனவு கலைந்துபோனது.
நான்காவது பந்திலும் அத்தப்பத்து விக்கெட் ஒன்றை வீழ்த்தி இலங்கையின் வெற்றியை உறுதி செய்தார்.
உபாதையிலிருந்து மீண்டுவந்து துடுப்பெடுத்தாடிய ஷர்மின் அக்தர் 64 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
ஆட்டநாயகி: ஹசினி பெரேரா.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM