அரச உத்தியோகத்தர் மீது சட்ட நடவடிக்கை

Published By: Digital Desk 7

07 Aug, 2017 | 01:09 PM
image

வவுனியா, தோணிக்கல் மயானத்திற்குச் செல்லும் வீதியில் நீண்ட நாட்களாக குப்பை வீசிவந்த அரச உத்தியோகத்தர் ஒருவர்  கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டு சட்ட நடவடிக்கைக்காக  நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

வவுனியா தோணிக்கல் மதகு வைத்தகுளம் பகுதிகளில் பொது மக்களின் ஒத்துழைப்புடன் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டதுடன் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் ஊழியர்கள் இப்பகுதியில் துப்பரவுப்பணிகளை மேற்கொண்டு வந்துள்ளனர். எனினும் தோணிக்கல் மயானத்திற்குச் செல்லும் வீதியில் சிலர் தொடர்ச்சியாக குப்பைகளை வீசி வந்துள்ளனர். 

இது தொடர்பாக பொதுமக்கள் பொது சுகாதாரப் பரிசோதகர்களின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளனர். இதையடுத்து சுகாதாரப்பரிசோதகர்கள் மேற்கொண்ட நடவடிக்கையின்போது குறித்த வீதியில் குப்பை வீசிய குறித்த அரச உத்தியோகத்தரை கடந்த 31ஆம் திகதி கையும் மெய்யுமாக பிடித்து அவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

 நீதிமன்ற சட்ட நடவடிக்கையின்போது குறித்த நபரிடமிருந்து தண்டம் அறவிடப்பட்டதுடன் நீதவான் அரச உத்தியோகத்தரை கடுமையாக எச்சரித்து விடுவித்துள்ளார்.

குறித்த பகுதியில் குப்பைகளை வீசுகின்றவர்களில் அனேகமானவர்கள் அரச உத்தியோகத்தர்கள்  என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:41:00
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59
news-image

மாஓயாவில் நீராட சென்ற 4 மாணவர்கள்...

2024-03-28 09:50:11