சீனா உள்ளிட்ட பல நாடுகளில் இளைய தலைமுறையினர் திருமணம் மற்றும் குழந்தை பெறுவதைத் தவிர்க்கத் தொடங்கியுள்ள நிலையில், சீனாவில் வசதி படைத்த பெண்கள் மத்தியில் 'கென்ஸ்' (Kens) என்று அழைக்கப்படும் ஆண் துணைகளை வாடகைக்கு அமர்த்தும் புதிய கலாச்சாரம் வேகமாகப் பரவி வருகிறது. இந்த வினோதமான போக்கு, சமூக ஊடகங்களில் பெரும் விவாதப் பொருளாகியுள்ளது.
'கென்ஸ்' யார்? எதற்காக அமர்த்தப்படுகிறார்கள்?
'கென்ஸ்' என்பவர்கள் இளமையான, கவர்ச்சியான மற்றும் நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட ஆண் பணியாளர்கள் ஆவர். இவர்கள், வசதியான மற்றும் மேல் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த சீனப் பெண்களின் வழக்கமான (Traditional) உறவுகளுக்கு அப்பாற்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு சேவைத் துறையாக உருவெடுத்துள்ளனர்.
அவர்களின் பணிகள்:
சமையல், துப்புரவுப் பணிகள், ஷொப்பிங், குழந்தைகளை பாடசாலையில் இருந்து அழைத்து வருதல் போன்ற வீட்டுப் பொறுப்புகளைச் செய்கிறார்கள். கணவர்களைப் போலவே பெண்களுக்கு உணர்ச்சி ரீதியான ஆதரவை (Emotional Support) வழங்குகிறார்கள். இவர்கள் எப்போதும் பெண்களுடன் வாதிட மாட்டார்கள். மறுப்புக் கூறாமல், பெண்களின் தேவைகளையும் விருப்பங்களையும் பூர்த்தி செய்யத் தயாராக இருப்பார்கள்.
இந்தக் கலாசாரம் உருவானதற்கான காரணம்:
வசதிபடைத்த பல பெண்கள் ஒரு துணையுடன் வாழ விரும்பினாலும், பாரம்பரியமான திருமண உறவில் உள்ள நிரந்தரமான மற்றும் கட்டாயமான பொறுப்புகள் எதற்கும் கட்டுப்பட விரும்பாததே இதற்குக் காரணம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM