2017 ஆம் ஆண்டு  மே மாதத் தில் இலங்­கைக்கு வரு­கை­தந்த சுற்­று­லாப்­ப­ய­ணி­களின் எண்­ணிக்கை 121,891 ஆக பதிவு செய்­யப்­பட்டு ஆண்­டுக்கு ஆண்டு அடிப்­ப­டையில் 2.5 சத­வீத வீழ்ச்­சியைப் பதி­வு ­செய்­தது. 

எனினும், ஒன்­று­சேர்ந்த அடிப்­ப­டையில், 2017 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாத காலப்­ப­கு­தியில் சுற்­றுலாப் பய­ணி­க­ளின் ­வ­ரு­கை

கள் 2016 ஆம் ஆண்டின் இக்­கா­லப்­ப­கு­தி­யுடன் ஒப்­பி­டு­கையில் 4.8 சத­வீ­தத்தால் வளர்ச்­சி­ய­டைந்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

சுற்­றுலாப் பய­ணி­களின் வரு­கை­களின் முதல் ஐந்து நாடு­க­ளாக இந்­தியா, சீனா, ஐக்­கிய இராச்­சியம், ஜேர்­மனி மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் விளங்குகின்றத. இக்­காலப் பகு­தியின் மொத்த சுற்­றுலாப் பய­ணி­களின் வரு­கையில் 51.4 சத­வீ­தத்­திற்கு பங்­க­ளிப்பு செய்­தன.

2017 ஆம் ஆண்டு மே மாத காலப்­ப­கு­தியில் சுற்றுலாவிலிருந்தான வருமானங்கள் 209.1 மில்லியன் டொலருக்கு அதிகரித்தது.