(நெவில் அன்தனி)
இந்தூர், ஹொல்கார் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெற்ற ஐசிசி மகளிர் உலகக் கிண்ணப் போட்யில் இந்தியாவை 4 ஓட்டங்களால் பரபரப்பான முறையில் வெற்றிகொண்ட இங்கிலாந்து, அரை இறுதியில் விளையாடும் தகுதியை உறுதிசெய்துகொண்டது.

அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா ஆகிய அணிகளைத் தொடர்ந்து மூன்றாவது அணியாக அரை இறதி வாப்ப்பை இங்கிலாந்து பெற்றுக்கொண்டது.
இரண்டு அணிகளும் சம அளவில் மோதிக்கொண்ட இப் போட்யில் இந்திய அணித் தலைவி ஹார்மன்ப்ரீத் கோர், ஸ்ம்ரித்தி மந்தனா, தீப்தி ஷர்மா ஆகிய மூவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதங்கள் குவித்த போதிலும் அநாவசியமான அடி தெரிவுகளால் தங்களது விக்கெட்களைத் தாரை வார்த்ததால் இங்கிலாந்து வெற்றியைத் தனதாக்கிக்கொண்டது.

ஹீதர் நைட் குவித்த சதமும் கடைசி ஓவர்களில் பந்துவீச்சாளர்களின் கட்டுப்பாடான பந்துவீச்சுகளும் இங்கிலாந்தை வெற்றிபெறச்செய்தன.
289 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 284 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
பவர் ப்ளேயில் இந்தியா 2 விக்கெட்களை இழந்து 42 ஓட்டங்களை மாத்திரம் பெற்று சிறு அழுத்தத்தை எதிர்கொண்டது.
ஆனால், ஸ்ம்ரித்தி மந்தனா, ஹார்மன்ப்ரீத் கோர் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 125 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவுக்கு நம்பிக்கை ஊட்டினர்.
ஹார்மன் ப்ரீத் கோர் 70 பந்துகளில் 10 பவுண்டறிகளுடன் 70 ஓட்டங்களைப் பெற்று தவறான ஆட்டத் தெரிவின்மூலம் விக்கெட்டை இழந்தார்.
தொடர்ந்து மந்தனா, தீப்தி ஷர்மா ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 67 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவுக்கு நம்பிக்கை ஊட்டினர்.
மொத்த எண்ணிக்கை 234 ஓட்டங்களாக இருந்தபோது ஸ்ம்ரித்தி மந்தனா பந்தை விசுக்கி அடிக்க முயற்சித்து பிடி கொடுத்து களம் விட்டகன்றார். அவர் 8 பவுண்டறிகளுடன் 88 ஓட்டங்களைப் பெற்றார்.
அவரைத் தொடர்ந்து ரிச்சா கோஷ் (8), திறமையாகத் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த தீப்தி ஷர்மா ஆகிய இருவரும் 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர்.
தீப்தி ஷர்மா 5 பவுண்டறிகளுடன் 50 ஓட்டங்களைப் பெற்று விக்கெட்டை பறிகொடுத்தார்.
அத்துடன் இந்தியாவின் வெற்றிக்கான எதிர்பார்ப்பு கலைந்துபோனது.
ஆமன்ஜோத் கோர் 18 ஓட்டங்களுடனும் ஸ்நேஹ் ராணா 10 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
பந்துவீச்சில் நெட் சிவர் - ப்றன்ட் 47 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
முன்னதாக இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இங்கிலாந்து, 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 288 ஓட்டங்களைக் குவித்தது.
டமி போமன்ட் (22), அமி ஜோன்ஸ் (56) ஆகிய இருவரும் 73 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
தொடர்ந்து ஹீதர் நைட், அணித் தலைவி நெட் சிவர் - ப்றன்ட் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 113 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சிறந்த நிலையில் இட்டனர்.
நெட் சிவர் - ப்ரன்ட் 38 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
அவரைத் தொடர்ந்து ஹீதர் நைட் 91 பந்துகளில் 15 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 109 ஓட்டங்களைக் குவித்தார்.
மத்திய மற்றும் பின்வரிசையில் எவரும் துடுப்பாட்டத்தில் பெரியளவில் பிரகாசிக்கவில்லை.
சார்ளி டீன் 19 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
பந்துவீச்சில் தீப்தி ஷர்மா 51 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஸ்ரீ சரணி 68 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகி: ஹீதர் நைட்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM