இருவேறு வீதி விபத்துக்களில் இருவர் பலி!

Published By: Digital Desk 1

19 Oct, 2025 | 01:47 PM
image

வாழைச்சேனை - காவத்தமுனை பகுதியில், முச்சக்கர வண்டி, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த உழவு இயந்திரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில், முச்சக்கர வண்டியின் பின் இருக்கையில் பயணித்த சிறுவன் பலத்த காயமடைந்து வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

காவத்தமுனை பகுதியைச் சேர்ந்த 09 வயதுடைய சிறுவனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

பிரேத பரிசோதனைக்குப் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய முச்சக்கர வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, மிஹிந்தலை - சீப்புகுளம்-கலென்பிந்துவெவ வீதியின் பலுவெவ பகுதியில் மோட்டார் சைக்கிள், வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தம்மன்னாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மிஹிந்தலை, சீப்புகுளத்தைச் சேர்ந்த 43 வயதுடையவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சடலம் தம்மன்னாவ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய வண்டியின் சாரதி தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபரை கைது செய்ய மிஹிந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இம்மாதத்தின் முதல் 12 நாட்களில் நாட்டில்...

2026-07-13 11:48:46
news-image

இலங்கை - உஸ்பெகிஸ்தான் இடையே புதிய...

2026-07-13 11:36:24
news-image

உலகில் அதிக போக்குவரத்து நெரிசல் மிக்க...

2026-07-13 11:20:46
news-image

மட்டக்களப்பு தளவாய் வீட்டுத்திட்ட வீதியை புனரமைக்குமாறு...

2026-07-13 11:00:38
news-image

பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ;...

2026-07-13 11:13:39
news-image

இலங்கையின் அதிக வயதான பெண்களில் ஒருவரான...

2026-07-13 10:20:18
news-image

வேளாண்மைத் துறையை ஜனாதிபதி பொறுப்பேற்க வேண்டும்...

2026-07-13 09:54:26
news-image

களுத்துறை மாவட்ட செயலகத்தில் திடீர் தீ...

2026-07-13 09:56:19
news-image

சில மாவட்டங்களுக்கு வெப்பமான வானிலை தொடர்பில்...

2026-07-13 09:25:14
news-image

பேராதனை, கொழும்பு ஆகிய பகுதிகளில் போதைப்பொருட்களுடன்...

2026-07-13 09:18:27
news-image

டெங்கு அபாயத்தால் மூடப்பட்டிருந்த கட்புல, அரங்கேற்றக்...

2026-07-13 09:16:08
news-image

மஹரகமவில் துப்பாக்கியுடன் இளைஞர் கைது!

2026-07-13 09:06:29