சீன அரசாங்கத்தின் துறைமுக நகர் அபிவிருத்தியின் மீள் ஆரம்பம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல் போன்றவற்றின் மூலம் 2016 ஆண்டை வர்த்தக துறையில் மாற்றத்துக்குஉரிய ஆண்டாக மாற்ற எதிர்பார்த்துள்ளோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக சுவிட்ஸர்லாந்துக்கு சென்றுள்ள பிரதமர் அங்கு இடம் பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு இந்த கருத்தினை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,1.4 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான துறைமுக அபிவிருத்தி நகர் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது. இது பொருளாதாரத்தின் முக்கியமான பங்காற்றும் நிகழ்ச்சித்திட்டமாகும் அத்தோடு குறித்த அபிவிருத்தி திட்டம் மூலம் 2 ஆம் காலாண்டில் அம்பந்தோட்டை துறை மு
கத்தின் வருமானத்தை அதிகரிக்க முடியும். ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் வட்டிவீதத்திற்கான அதிகரிப்பு குறைபாடாக பலராலும் விமர்சிக்கப்பட்டாலும் அதனை நிவர்த்திக்க எம்மால் முடிந்துள்ளது.
மேலும், நல்லாட்சி அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட வரவு - செலவு திட்டத்தின் மீள் திருத்தங்களும் பல மாற்றங்களும் பிற்பட்ட காலப்பகுதியில் ஏற்படுத்தப்பட்டன. இதன் மூலம் பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைந்துகொள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற எதிர்பார்த்துள்ளோம். இதற்கெனபரந்துப்பட்ட கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகின்றோம்.
உலக பொருளாதார மாநாட்டில்இதற்கான ஆரம்பகட்ட களந்துரையாடல்களில் ஈடுப்பட உள்ளோம்.
உலக பொருளாதாரத்தின் பல்வேறு வகையான தளம்பல் நிலைமைகளும் ஸ்திரமற்ற போக்குகளும் இனங்காணப்பட்ட வேளையில் சீன அரசு நுகர்வை அடிப்படையாக கொண்ட பொருளாதார முறைமையை அறிமுகப்படுத்தியது. இலங்கையில் கலந்தாலோசிக்கப்பட்ட பொருளாதார மாநாடுகளில் குறித்த விடயம் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டது. மேலும் தனியார் துறையின் வளர்ச்சி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் செயற்பாட்டு திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் உள்ள விளைவுகள் தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டது.2016 ஆம் ஆண்டு எவ்வாறான மாற்றங்களை தரும் என்பதனை யாராலும் அனுமானிக்க முடியாது. அந்த வகையில் பொருளாதார ஸ்திரமின்மை மற்றும் நிச்சியமற்ற வர்த்தக துறை என்பன காணப்படுகின்ற வேளையில் நாம் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தத்தை மேற்கொள்ள உள்ளோம் என்பது வியப்புக்குரிய ஒன்றாகும்.
இலங்கையின் உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்வதில் பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்த உத்தேசித்துள்ளோம்.
உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்வதில் சீன அரசாங்கத்தின் முதலீட்டு கொள்கைகள் மட்டும் போதுமானதாக அமைந்து விடாது. இதற்கு அமைய பல புதிய நாடுகளின் அபிவிருத்தி கொள்கைகளை உள்ளீர்க்க திட்டமிட்டுள்ளோம். மேலும் சொத்து சார் வார்த்தகத்தின் சீன அரசாங்கத்தின் பங்களிப்பையும் எதிர்பார்த்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM