இன்றைய திகதியில் நாம் வாழும் புறச் சூழல் என்பது பெரும்பாலும் மாசடைந்திருக்கிறது. இதன் காரணமாக எம்முடைய நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டு லங்ஸ் ஃபைப்ரோசிஸ் எனப்படும் நுரையீரல் பகுதியில் வடுக்கள் பாதிப்பு ஏற்படுகிறது. இதனை துல்லியமாக அவதானித்து அதற்குரிய பிரத்யேக சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என வைத்தியர்கள் அறிவுறுத்துகிறார்கள். மேலும் இதற்கு உரிய தருணத்தில் சிகிச்சை பெறாவிட்டால்... உயிரிழப்பிற்குரிய பாரிய அச்சுறுத்தலை உண்டாக்கும் என்றும் எச்சரிக்கிறார்கள்.
எம்மில் சிலருக்கு நடை பயிற்சி மேற்கொள்ளும் போதும் அல்லது சற்று விரைவாக நடக்கும் போதும் சுவாசத்திணறல் ஏற்படும். இதனை தொடக்க நிலை அறிகுறியாக கொண்டு உடனடியாக அருகில் இருக்கும் வைத்தியசாலைக்குச் சென்று வைத்தியர்களை சந்தித்து நுரையீரல் இயங்குத்திறன் குறித்த பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என வைத்தியர்கள் அறிவுறுத்துகிறார்கள். சிலருக்கு நுரையீரல் பகுதியில் உள்ள சிறிய அளவிலான காற்றறைகள் இயல்பான அளவைவிட கூடுதலாக தடிமனாகி, அங்கு ஓக்சிஜன் சென்று இயங்கி வரும் சுழற்சி நிலையில் பாதிப்பு ஏற்படுகிறது. சிலருக்கு இதன் காரணமாக அத்தகைய காற்று அறைகளில் வீக்கம் ஏற்படக்கூடும். சிலருக்கு அப்பகுதியில் வடுக்கள் உண்டாகும். இது சுவாசத்தை கடினமானதாக மாற்றுகிறது. அத்துடன் நுரையீரலில் உள்ள திசுக்களையும் பாதிக்கிறது. இதன் காரணமாக நுரையீரலின் சுருங்கி விரியும் திறனில் தடையை ஏற்படுத்துகிறது. சிலருக்கு இத்தகைய பாதிப்பு நாட்பட்டதாகவும் ஏற்படக்கூடும். இதனை மருத்துவ மொழியில் இடியோபதிக் லங்ஸ் ஃபைப்ரோசிஸ் என குறிப்பிடுவார்கள்.
மூச்சுத் திணறல், தொடர் வறட்டு இருமல், சோர்வு, திடீர் எடை இழப்பு, விரல்களில் அசௌகரிய உணர்வு , உதடுகள்- கண்கள்- நகங்கள்- தோல்- ஆகியவற்றில் நிறமாற்றம் ஆகிய அறிகுறிகளை உண்டாக்கும். இத்தகைய அறிகுறிகள் ஏற்பட்டிருந்தால்... உடனடியாக வைத்தியர்களை சந்தித்து அவர்கள் பரிந்துரைக்கும் எக்ஸ்ரே ,சிடி ஸ்கேன் ,நுரையீரல் இயங்குத்திறன் பரிசோதனை, குருதி பரிசோதனை, திசு பரிசோதனை, எக்கோ கார்டியோ கிராம் போன்ற பரிசோதனைகளை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிக்க வேண்டும். இதனை தொடர்ந்து வைத்தியர்கள் நவீன மருத்துவ தொழில்நுட்பத்துடன் கண்டறியப்பட்ட பிரத்யேக மருந்தியல் சிகிச்சையை வழங்கி, இதற்கு நிவாரணம் வழங்குவார்கள். வெகு சிலருக்கு மட்டுமே சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டியதிருக்கும்.
வைத்தியர் செல்வி தொகுப்பு அனுஷா.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM