நவகிரகங்களில் செவ்வாய் பகவானின் பரிபூரணமான அருள் உங்களுடைய ஜாதகத்தின் வழியாக கிடைக்கவில்லை என்றால் ..இதனால் உங்களது வாழ்க்கையில் திருமண விடயங்களில் எதிர்பாராத மாய தடைகள் ஏற்படும்.
அத்துடன் குருதி தொடர்பான ஆரோக்கிய குறைபாடுகளும் ஏற்படக்கூடும். உங்களின் செயல்பாடுகளில் அதாவது நீங்கள் தீட்டிய திட்டங்களில் திட்டமிட்டபடி செயல்படாத - சாத்தியப்படுத்த இயலாத- சூழல் உருவாகும்.
இதனால் செவ்வாய் பகவானை வணங்குவதன் மூலமும், செவ்வாய் கிரகத்திற்கான சூட்சம குறிப்புகளை ஆயுள் முழுவதும் தொடர்ந்து பின்பற்றுவதன் மூலமும் இதன் பிடியிலிருந்து விலகி, வாழ்க்கையில் மகிழ்ச்சியும், முன்னேற்றத்தையும் அடையலாம் என எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
பொதுவாக செவ்வாய் கிரகத்தின் வலிமை குறைந்துவிட்டது என்றால்... அதனை வலுப்படுத்திக் கொள்வதற்கான விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
செவ்வாய் என்றால் முருகப்பெருமானை குறிக்கும். இதன் காரணமாக செவ்வாய்க்கிழமைகளில் செவ்வாய் ஓரையில் அருகில் இருக்கும் முருகன் ஆலயத்திற்கு சென்று முருகனை வழிபடுவதை வழக்கமாக மேற்கொள்ள வேண்டும்.
செவ்வாய் என்றால் தாமிரத்தை குறிக்கும். இதனால் தாமிரத்தால் தயாரிக்கப்பட்ட மோதிரத்தை மோதிர விரலில் அணிந்து கொள்ள வேண்டும்.
செவ்வாய் என்றால் வேப்ப மரத்தை குறிக்கும். இதனால் வாய்ப்பு கிடைக்கும் போதும் அல்லது வாய்ப்பை உருவாக்கிக் கொண்டும்.. வேப்பமர நிழலில் 24 நிமிடங்கள் இளைப்பாற வேண்டும்.
செவ்வாய் என்பது வண்ணங்களில் சிவப்பைக் குறிப்பதால்.. அந்த வண்ணத்திலான கைகுட்டையை எப்போதும் உடன் வைத்திருக்கலாம்.
செவ்வாய்க்கிழமைகளில் அருகில் இருக்கும் முருகன் ஆலயத்திற்கு சென்று முருகப் பெருமானுக்கு செவ்வரளி மலர்களை மாலையாக சாற்றி அல்லது செம்பருத்தி பூவை சாற்றி அங்கு ஆலய நிர்வாகம் அனுமதித்திருக்கும் இடத்தில் வேப்ப எண்ணையை ஊற்றி தீபமேற்றி வழிபட வேண்டும்.
செவ்வாய்க்கிழமைகளில் வீட்டில் தீப தூபம் காண்பிக்கும் போது அதில் சிறிதளவு வேப்பம் பூவை இடவேண்டும்.
செவ்வாய்க்கிழமைகளில் துவரம் பருப்பால் தயாரிக்கப்பட்ட உணவை பசியாறலாம். அதனை தானமாகவும் தரலாம்.
முருகப்பெருமானின் ஆயுதம் என குறிப்பிடப்படும் வேலை வீட்டில் வைத்து அதனை செவ்வாய்க்கிழமை தோறும் தவறாமல் பூஜை செய்தாலும் செவ்வாய் பகவானின் அருள் பரிபூரணமாக கிட்டும்.
தொகுப்பு: சுபயோக தாசன்















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM