கிளிநொச்சி, இயக்கச்சி சங்கத்தார்வயல் பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் வாள்வெட்டுக்கு இனக்கான நிலையில் யாழ் பருத்தித்துறை பிரதேசத்தைச் சேர்ந்த மூவர்  கிளிநொச்சி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக நோயாளர் காவுவண்டி மூலம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் வெட்டுக்காயங்களுக்கு இலக்கானவர்கள்  யாழ் பருத்தித்துறை பிரதேசத்தைச் சேரந்த 35, 25, 19 ஆகிய வயதுடைய ஆண்கள் என தெரியவருகின்றது. இதில் 25 வயதான இளைஞனே மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

இவ் வாள்வெட்டுச் சம்பவம் ஆனது குடும்பத் தகராற்றினால் இடம்பெற்றுள்ளதென பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை பளைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.