மார்பகப் புற்றுநோய் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்திரா புற்றுநோய் அறக்கட்டளையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள TLC போட்டித் தொடர் - 2025 இலங்கையின் நான்கு மாவட்டங்களில் நடாத்தப்படவுள்ளது.
இந்த போட்டித் தொடரானது கிளிநொச்சி, மட்டக்களப்பு, மாத்தறை மற்றும் கொழும்பு ஆகிய நான்கு மாவட்டங்களில் நடாத்தப்படவுள்ளது.
இந்த போட்டித் தொடரானது விளையாட்டு மற்றும் சுகாதாரக் கல்வியின் முக்கியத்துவத்தை ஒன்றிணைத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மார்பகப் பரிசோதனையின் முக்கியத்துவத்தை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் இந்த போட்டித் தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நீச்சல் போட்டி, சைக்கிள் ஓட்டப்போட்டி மற்றும் ஓட்டப்போட்டி ஆகியவற்றை ஒருங்கிணைத்து இந்த போட்டித் தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த போட்டித் தொடரின் முதலாவது கட்டம் மாத்தறையில் உள்ள கொட்டவில விளையாட்டு மைதானத்தில் எதிர்வரும் 19 ஆம் திகதி காலை 7:30 மணிக்கு நடாத்தப்படவுள்ளது.
ஏனைய மாவட்டங்களுக்கான போட்டித் தொடர் எதிர்வரும் நாட்களில் நடைபெறும்.
புற்றுநோய் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், புற்றுநோயின் ஆரம்பகட்டத்தை கண்டறிவது குறித்து தெளிவுப்படுத்துவதற்கும் இந்த போட்டித் தொடர் பயனளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM