யாழ்ப்பாணத்தில் சீரற்ற காலநிலை நிலவும் நாட்களில் மந்திரிமனை மேலும் சேதமடையாதிருக்க, மந்திரிமனையின் வாயிற்பகுதியில் உள்ள கூரைகள் அகற்றப்பட்டு, அவற்றை பாதுகாக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அகற்றப்படும் பொருட்களை பாதுகாப்பாக பேணி, மழைக்காலம் முடிவடைந்த பின்னர் மீள பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 17ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பெய்த மழை காரணமாக மந்திரிமனையின் பாகமொன்று இடிந்து விழுந்தது.
முன்னதாக, சேதமடைந்து காணப்பட்ட அப்பகுதி மேலும் இடிந்து விழாமல், அதனைக் காப்பாற்றுவதற்காக இரும்புக் கம்பிகள் பொருத்தப்பட்டது. இந்நிலையில், அந்த இரும்புக் கம்பிகளை திருடர்கள் திருடிச் சென்றமையால், பாதுகாப்பின்றி இருந்த மந்திரிமனையின் குறித்த பாகம் கடந்த மாதம் இதே நாளில் மழைக்கு காரணமாக இடிந்து விழுந்தது.
அதன் பின்னர், ஏனைய பாகங்கள் இடிந்து விழாமல் பாதுகாக்க, மீண்டும் இரும்புக் கம்பிகள் பொருத்தப்பட்டன.
இந்நிலையில், தற்போது யாழ்ப்பாணத்தில் மழைக் காலம் தொடங்கியுள்ளமையால், மந்திரிமனையின் மேல் கூரைகளின் பாரத்தால், சுவர்கள் இடிந்து விழும் அபாயம் காணப்படுகிறது. இதன் காரணமாக, கூரைகளை அகற்றும் நடவடிக்கைகளை தொல்லியல் திணைக்களம் முன்னெடுத்துள்ளது.
இந்த மந்திரிமனை அமைந்துள்ள நிலப்பகுதி தனியார் ஒருவருக்கு சொந்தமாக காணப்படுவதால், அதனை புனரமைக்க அவர் கடந்த காலங்ககளில் சம்மதம் தெரிவிக்காதமையாலேயே மந்திரிமனை கடந்த காலங்களில் புனரமைக்கப்படவில்லை என தொல்லியல் திணைக்களம் கூறியிருந்தது.
தற்போது மந்திரிமனையின் வாயில் பகுதியில் உள்ள கூரைகளை அகற்ற குறித்த உரிமையாளர் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அவற்றை தற்காலிகமாக அகற்றி பாதுகாப்பாக வைத்திருந்து, மழைக்காலம் முடிந்த பின்னர், மீள பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதிமொழியுடன் தொல்லியல் திணைக்களம் கூரைகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளது.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM