திருகோணமலையில் சட்டத்தரணிக்கு அச்சுறுத்தல் விடுத்த நபருக்கு பிணை

Published By: Digital Desk 3

17 Oct, 2025 | 03:48 PM
image

திருகோணமலையில் சட்டத்தரணி ஒருவரை அச்சுறுத்தியதாக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டில் கைது செய்யப்பட்ட நபருக்கு நீதிமன்றம் பிணை வழங்கி விடுதலை செய்துள்ளது.

பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்கானது நீதிமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை (17) விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோது மேலதிக நீதிபதியால் குறித்த நபரக்கு பிணை வழங்கப்பட்டு வழக்கானது எதிர்வரும் 29ஆம் திகதிக்கு விசாரணைக்காக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை (14) குறித்த சட்டத்தரணியை குறித்த நபர் நீதிமன்றில் வைத்து அச்சுறுத்தியதாக சட்டத்தரணியால் அன்று மாலை துறைமுக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில குறித்த வழக்கான இன்றையதினம் நீதிமன்றில் விசாரணைக்காக அழைக்கப்பட்டபோது சட்டத்தரணிக்கு ஆதரவாக திருகோணமலையில் உள்ள அனைத்து சட்டத்தரணிகளும் முன்னிலையாகி இருந்ததுடன் எதிர் தரப்பிற்கு ஆதரவாக கந்தளாயில் இருந்து வருகை தந்த இரு சட்டத்தரணிகள் முன்னிலையாகி இருந்தனர்.

குறித்த வழக்கை ஆராய்ந்த நீதவான் குறித்த அச்சுறுத்தல் தொடர்பில் ஆராய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தவிட்டதுடன் எதிர்வரும் 29 திகதிக்கு திகதியிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடலோர காவல்படையினரால் கைப்பற்றப்பட்ட 1500 கிலோவிற்கும்...

2025-11-15 04:10:11
news-image

இலங்கை இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு...

2025-11-15 03:47:28
news-image

யாழில் கஞ்சா கலந்த மாவா மற்றும்...

2025-11-15 02:35:54
news-image

மட்டக்களப்பு வைத்தியசாலையில் கைபேசிகள் திருடிய இளைஞன்...

2025-11-14 23:00:58
news-image

பாராளுமன்றத்தில் தகாத வார்த்தைகள், குற்றச்சாட்டுகள் தவிர்க்கப்பட...

2025-11-14 15:50:45
news-image

எதிரணியை பெருந்தோட்ட மக்கள் கடுமையாக எதிர்க்க...

2025-11-14 17:02:07
news-image

323 சர்ச்சைக்குரிய கொள்கலன்களில் ஆயுதங்கள் இருந்தன...

2025-11-14 15:51:14
news-image

ஜனாதிபதியின் போதைப்பொருள் ஒழிப்பு செயற்றிட்டத்தக்கு ஆதரவு...

2025-11-14 17:04:27
news-image

வடக்கு மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு இந்த...

2025-11-14 15:52:06
news-image

பிரஜா சக்தி வறுமை ஒழிப்பு தேசிய...

2025-11-14 16:59:24
news-image

பெருந்தோட்ட மக்களுக்கு 200 ரூபா சம்பளத்தை...

2025-11-14 17:03:23
news-image

யாழில் விளையாட்டு வினையானது; குடும்பஸ்தர் உயிரிழப்பு!

2025-11-14 20:00:17