சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி மதுபோதையில் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் சாரதியை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கெப்பெத்திகொல்லெவ நீதவான் நிமேஷா பட்டபெதிகே உத்தரவிட்டுள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பஸ் சாரதி மீரிகம பூகொடை பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
பதவிய பொலிஸ் போக்குவரத்து பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் அநுராதபுரத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சந்தேக நபரான பஸ் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வைத்திய பரிசோதனையில் சந்தேக நபரான பஸ் சாரதி மதுபோதையில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபரிடம் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லை எனவும் தெரியவந்துள்ளது.
கைதுசெய்யப்பட்ட பஸ் சாரதி கெப்பெத்திகொல்லெவ நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM