அவுஸ்திரேலிய அணிக்கெதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர் ரொஸ் டெய்லர் 235 ஓட்டங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இரு அணிகளுக்குமிடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டி அவுஸ்திரேலியாவின் பேர்த் மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.

இப் போட்டியில்  அவுஸ்திரேலிய அணி முதல் இனிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து 559 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை இடை நிறுத்திக் கொண்டது.

தனது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடத் தொடங்கிய நியூசிலாந்து  முதல் இரு விக்கெட்டுகளையும் 87 ஓட்டங்களுக்கு இழந்தது.
இந்நிலையில் மூன்றாவது வீக்கெட்டுக்காக இணைந்த ரொஸ் டெய்லர் மற்றும் வில்லியம்ஸ் ஜோடி 265 ஓட்டங்களை தமக்கிடையே பகிர்ந்து கொண்டது.

இதனால் 14 வருடங்களாக முறியடிக்காமல் இருந்த நாதன் ஆஸ்டில் மற்றும் அடம் பரோரே ஜோடி 8 ஆவது வீக்கெட்டுக்கா இதே மைதானத்தில் பகிர்ந்து கொண்ட 253 ஓட்டங்கள் என்ற இணைப்பாட்டம்  முறியடிக்கப்பட்டது.

தொடர்ந்து அவுஸ்திரேலிய பந்தாளர்களை பந்தாடிய ரொஸ் டெய்லர்  235 குவித்து சாதனைப்படைத்தார். பிரிஸ்பேன் டெஸ்டில் 1985 ஆம் ஆண்டு  188 ஓட்டங்களே சாதனையாக இருந்தது. அதுமட்டுமன்றி 45 ஆண்டுகால பேர்த் மைதான வரலாற்றில் இரட்டைச்சதம் கடந்த முதல் வெளிநாட்டு வீரர் என்ற சாதனையையும்  ரொஸ் டெய்லர் தன்வசமாக்கினார்.

தனது முதல் இனிங்சில் சகல வீக்கற்றுக்களையும் இழந்து 624 ஓட்டங்களை நியூசிலாந்து குவித்தது. தற்போது, தனது 2  ஆவது இன்னிங்சையை ஆரம்பித்துள்ள  அவுஸ்திரேலிய அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 171 ஓட்டங்களை பெற்றுள்ளது.