இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை இரு மடங்கு வேகத்தில் ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.
சர்க்கரை நோய் பற்றிய விழிப்புணர்வு இருந்தாலும்... சர்க்கரை நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவில்லை என்றால்... டயபடிக் காஸ்ட்ரோபரேசிஸ் எனப்படும் பாதிப்பு ஏற்படுவதாக வைத்தியர்கள் எச்சரிக்கிறார்கள்.
நீங்கள் டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு நோயாளிகளாக இருந்து... சர்க்கரை இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டிருக்கும் தருணத்தில்... உங்களுக்கு நெஞ்செரிச்சல், வாந்தி, குமட்டல், ரத்த சக்கரையை கட்டுப்படுத்தாத நிலை, வயிறு வீக்கம், அதீத பசி, திடீர் எடை இழப்பு, திடீர் எடை அதிகரிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால்... நீங்கள் சர்க்கரை நோய் சிகிச்சை நிபுணரை சந்தித்து உங்களுக்கு டயாபட்டிக் காஸ்ட்ரோபரேசிஸ் எனும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா? என்பது குறித்து அறிந்து கொள்ள வேண்டும்.
உங்களுடைய உணவு குழாய் வழியாக நீங்கள் பசியாறும் உணவு... இரைப்பை வழியாக குடலுக்கு செல்லும். இந்நிலையில் நீங்கள் உங்களுடைய இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிட்டால் ... உங்களுடைய உணவை குடல் உறிஞ்சும் தன்மையை இழந்து விடும். ஏனெனில் அதற்கான நரம்பு மண்டலம் ரத்த சர்க்கரை பாதிக்கப்பட்டு விடும்.
சுருக்கமாக விவரிக்க வேண்டும் என்றால்... நீங்கள் குறைவாக சாப்பிட்டவுடன் வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படும். நீங்கள் சாப்பிட்ட உணவு இரைப்பைக்கு செல்லும் .ஆனால் அங்கிருந்து குடலுக்கு செல்லாமல் ... அங்கேயே இயல்பான அளவை விட கூடுதலான நேரத்திற்கு செரிக்கப்படாமல் தேக்கமடையும். வயிற்றில் இருக்கும் உணவு கெட்டு இருப்பதால்... அவை பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
மேலும் செரிமானம் ஆகாமல் இருக்கும் உணவு கெட்டித் தன்மை ஏற்பட்டு, பேசோர் எனப்படும் கட்டியாக உருவாகிவிடும் . இது உங்களது வயிற்றுப் பகுதியில் வளர்ச்சி அடைந்து... நீங்கள் சாப்பிடும் உணவை சிறுகுடலுக்குள் செல்லாமல் தடுத்து விடும். இதனால் உங்களால் ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த இயலாத நிலை உருவாகும்.
இந்த நிலையில் உடனடியாக சிகிச்சை பெறாவிட்டால்... தினமும் வாந்தி எடுக்க வேண்டியதிருக்கும் . ரத்த சர்க்கரையின் அளவு கட்டுக்கடங்காமல் சென்று.. உயிருக்கு அச்சுறுத்தலையும் உண்டாக்கும்.
இதன் காரணமாக இத்தகைய பாதிப்பு ஏற்பட்டவுடன் வைத்தியர்களை சந்தித்து அவர்கள் பரிந்துரைக்கும் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.
வைத்தியர்கள் இதன் போது சிண்டிகிறாபி எனப்படும் பரிசோதனையை மேற்கொண்டு ... உங்களுக்கு டயாபட்டிக் காஸ்ட்ரோபரேசிஸ் எனும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா? இல்லையா? என்பதை துல்லியமாக அவதானிப்பார்கள்.
அதன் பிறகு ரத்த சக்கரையின் அளவை கட்டுப்படுத்துவதற்கான நவீன தொழில்நுட்பத்துடன் கண்டறியப்பட்ட பிரத்யேக மருந்தியல் சிகிச்சை மூலம் இதற்கு நிவாரணம் அளிப்பார்கள். இருப்பினும் இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.
வைத்தியர் அருணாச்சலம்
தொகுப்பு அனுஷா.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM