நாடளாவிய ரீதியில் ஒக்டோபர் 10 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 3,312 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பொலிஸ் அதிகாரிகள், இராணுவ வீரர்கள், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கடற்படையினர் ஆகியோர் இணைந்து இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, ஹெரோயின் போதைப்பொருளுடன் 1048 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 1152 பேரும், ஹேஷ் போதைப்பொருளுடன் 47 பேரும், கஞ்சா போதைப்பொருளுடன் 963 பேரும், கஞ்சா செடிகளுடன் 23 பேரும், போதை மாத்திரைகளுடன் 73 பேரும், சட்டவிரோத சிகரட்டுகளுடன் 06 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 01 கிலோ 731 கிராம் 426 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 03 கிலோ 161 கிராம் 246 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், 862 கிராம் 746 மில்லிகிராம் ஹேஷ் போதைப்பொருளும், 67 கிலோ 415 கிராம் 927 மில்லிகிராம் கஞ்சா போதைப்பொருளும், 23755 கஞ்சா செடிகளும், 4849 போதை மாத்திரைகளும், 63 சட்டவிரோத சிகரட்டுகளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM