புல்மோட்டை ஊழியர்கள் சம்பளக் கோரி தொடர் போராட்டம்

17 Oct, 2025 | 02:53 PM
image

திருகோணமலை புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபன ஊழியர்கள் சிலர் சம்பளம் கோரி மூன்றாவது நாளாகவும் நிறுவனத்தின் முன்பாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். 

கடந்த 2024 ஏப்ரல் மாதத்தில் இருந்து யூலை மாதம் வரையிலான காலப்பகுதியில் PL-1-2016 சம்பள அளவுத்திட்டத்தின்கீழ் அமைய அடிப்படையில் நியமனம் வழங்கப்பட்ட குறித்த ஊழியர்களே 15 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என தெரிவித்து நிறுவனத்தின் முன்பாக தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

குறித்த காலப்பகுதியில் நியமனம் வழங்கப்பட்ட 83 ஊழியர்களுக்கு நியமனம் வழங்கிய நாளில் இருந்து இன்றுவரை 15 மாதங்களுக்கு மேலாக எவ்வித கொடுப்பனவுகளும் வழங்கப்படவில்லை எனவும் இதனால் தாம் மிகுந்த பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

குறித்த நிலுவைச் சம்பளத்தை வழங்கக்கோரி பாதிக்கப்பட்ட ஊழியர்கள் கடந்த வருடம் மார்ச் மற்றும் யூன் மாதங்களில் போராட்டங்களை நடத்தியிருந்தார்கள்.

இதன்போது தீர்வை வழங்குவதாக அறிவித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டிருந்தார்கள் இருப்பினும் இதுவரை எவ்வித தீர்வுகளும் தமக்கு வழங்கப்படவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

போதைப்பொருள் மீட்புப் பொலிஸாரை வாளினால் மிரட்டியவர்...

2025-11-14 03:19:35
news-image

சாதாரண குடும்ப உணவுக் கட்டணம் ஒரு...

2025-11-14 03:12:58
news-image

சபரிமலை யாத்திரையை புனித யாத்திரையாக அறிவித்து...

2025-11-14 03:06:44
news-image

நுண்ணுயிர் கொல்லி எதிர்ப்பு மீள் சுழற்சியால்...

2025-11-14 02:55:42
news-image

சம்பள உயர்வுக்கு ஜனாதிபதிக்கு நன்றி; 25...

2025-11-14 02:48:24
news-image

தோட்டத் தொழிலாளிக்கு ஒருநாள் வேலைக்கான வருகைக்...

2025-11-14 01:51:35
news-image

அனைத்து மக்களும் சுயகௌரவத்துடன் வாழக்கூடிய நாடு...

2025-11-14 01:46:01
news-image

வட–கிழக்கில் போதைப்பொருள் ஒழிக்க இராணுவத்தை அகற்ற...

2025-11-14 01:43:00
news-image

2026 வரவு–செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு...

2025-11-14 01:40:52
news-image

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எதிர்க்கட்சித்...

2025-11-14 01:01:49
news-image

சட்டவிரோத மீன்பிடியை தடுப்பதற்காக கடற்படையினர் மேற்கொண்ட...

2025-11-14 00:51:47
news-image

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 840...

2025-11-14 00:46:43