சின்னத்திரை தொடர்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகர் சித்து கதையின் நாயகனாக வெள்ளித்திரையில் அறிமுகமாகும் 'டார்க் ஹெவன்' எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர் மித்ரன் ஆர். ஜவகர் சிறப்பு அதிதியாக பங்கு பற்றி படத்தின் டீசரை வெளியிட்டார்.
'D3' எனும் படத்தை இயக்கிய இயக்குநர் பாலாஜி இயக்கத்தில் உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் 'டார்க் ஹெவன்'. இதில் சித்து, தர்ஷிகா, ஷரண், ரித்விகா, வேல ராமமூர்த்தி , நிழல்கள் ரவி, ஜெயக்குமார், அருள் ஜோதி, விஜய் சத்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
மணிகண்டன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சக்தி பாலாஜி இசையமைத்திருக்கிறார். கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை கோதை என்டர்டெய்ன்மென்ட் மற்றும் எஸ் எம் மீடியா ஃபேக்டரி ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
டிசம்பரில் வெளியிட திட்டமிடப்பட்டு வரும் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹொட்டேலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினருடன் இயக்குநர் மித்ரன் ஆர். ஜவகர் சிறப்பு அதிதியாக பங்குபற்றினார்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' மலை கிராமம் ஒன்றில் ஒவ்வொரு ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு வரும் ஜூன் மாதத்தில் அங்குள்ள ஆண்கள் அனைவரும் மரணம் அடைவார்கள் என்ற நம்பிக்கையை அடிப்படையாக வைத்து இப்படத்தின் கதை, திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.
இதற்கு பொருத்தமாக இருக்கும் என்றுதான் ஆங்கிலத்தில் 'டார்க் ஹெவன்' என பெயரிட்டிருக்கிறோம். இப்படத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM