40 ஆண்டு பாராளுமன்ற அரசியல் பிரவேசம் நிறைவையொட்டி வரவேற்பு நிகழ்வு ஒன்றுக்கு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும், நாட்டின் பிரதமமந்திரியுமான ரணில் விக்ரமசிங்க இன்று ஹட்டன் நகருக்கு விஜயத்தை மேற்கொண்டார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் 40 ஆண்டு பாராளுமன்ற அரசியல் பிரவேசம் நிறைவையொட்டி ஐக்கிய தேசிய கட்சியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாஸவின் எற்பாட்டில் இந்த வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது.
ஆரம்ப நிகழ்வாக ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்திலும், நீக்ரோதாரராம பௌத்த விகாரையிலும், ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலிலும் இடம்பெற்ற விசேட பூஜைகளில் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டார்.
அத்தோடு ஹட்டன் டிப்போவினால் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள ஹட்டனிலிருந்து மட்டகளப்புவிற்கான பஸ் சேவையையும் ஆரம்பித்து வைத்தார்.
அதன்பின் மக்களை சந்திக்கும் முகமாக டீ.கே.டபிள்யூ கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்திலும் கலந்து கொண்டார்.
இந் நிகழ்விற்கு நாட்டின் பிரதமர் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கே.கே.பியதாஸ, வடிவேல் சுரேஷ், லக்கி ஜெயவர்த்தன ஆகியோருடன் கட்சி உறுப்பினர்கள் மற்றும் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM