சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் அதிரடி நடவடிக்கை ; போக்குவரத்து சட்டங்களை மீறிய 17 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு!

Published By: Vishnu

17 Oct, 2025 | 03:57 AM
image

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் தலைக்கவசம் அணியாமல், சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல், போதைப் பொருள், நீதிமன்ற பிடியாணை மற்றும் போக்குவரத்து சட்ட திட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் கீழ் சிலரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்தோடு மோட்டார் சைக்கிளையும் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் மீட்டுள்ளனர்.

இச் சம்பவம் வியாழக்கிழமை (16) வியாழக்கிழமை நடைபெற்றுள்ளது. அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதான வீதியில் வைத்து குறித்த கைது இடம்பெற்றுள்ளது.

சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் நடவடிக்கையின் போது, 160 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருளை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் (39) வயதுடைய சம்மாந்துறை மட்டக்களப்பு தரவை 02 பகுதியைச் சேர்ந்த ஒருவரும், நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுயிருந்த சந்தேக நபர்கள் இருவருமே இந்த சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், சில மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், கைது செய்யப்பட்டவர்கள் உள்ளிட்ட சான்றுப் பொருள்கள் என்பன சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையில் சம்மாந்துறை, சவளக்கடை, கல்முனை பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மேலும், இந்த கைது நடவடிக்கையானது கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் ஆலோசனைக்கு அமைய, சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என்.நிசாந்த பிரதிப்குமாரவின் தலைமையிலான குழுவினரினால் குழுவினர் ஈடுபட்டிருந்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைச் சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெடிபொருட்களைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்களுடன் இரு...

2026-09-16 14:56:41
news-image

நாமல் ராஜபக்‌ஷவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

2026-09-16 14:56:09
news-image

யாழ். களப்பில் 9,000 கடல் அட்டைகளுடன்...

2026-09-16 14:55:03
news-image

புதுக்குடியிருப்பில் மணற்கொள்ளை உட்பட சட்டவிரோத செயற்பாடுகள்...

2026-09-16 14:52:16
news-image

கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார் நாமல்...

2026-09-16 14:14:14
news-image

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சட்டவிரோத வெளிநாட்டு...

2026-09-16 13:51:46
news-image

மட்டக்களப்பில் சிவஞானம், சுமந்திரன் உட்பட 4...

2026-09-16 12:46:18
news-image

அழைப்பாணையை அறிந்திருந்தும் ஷிரந்தி ராஜபக்‌ஷ நாட்டை...

2026-09-16 12:49:25
news-image

சுரேஷ் சலேவின் மருத்துவ அறிக்கைகளை சமர்ப்பிக்காத...

2026-09-16 13:12:57
news-image

மாத இறுதிக்குள் வருமான வரியைச் செலுத்துங்கள்...

2026-09-16 12:44:59
news-image

பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் நீர் முழுவதையும் வற்றச்...

2026-09-16 12:12:13
news-image

ஞானசார தேரர் மீதான வழக்கு செப்டெம்பர்...

2026-09-16 12:21:37