மனித வாழ்க்கையின் முழுமையை தீர்மானிக்கின்ற சக்தியாக வாசிப்பு காணப்படுகின்றது. பிரான்சிஸ் பேகன் அவர்கள் "வாசிப்பு மனிதனை முழுமையாக்கும்" என்கின்றார். அறிவை ஆற்றல் மிக்க சக்தியாக உரு திரட்டி உலகின் சவால்களை எதிர்கொள்ளும் திராணியாக வாசிப்பு திகழ்கின்றது. மனிதன் தன்னைத் தானே அறியவும், அவன் பலம், பலவீனங்கள் பற்றியும் உலக சிந்தனை பற்றியும் அறிந்து உலகத்துடன் இணைந்து செயல்படவும் வாசிப்பு முக்கியமாக என்றது.
இன்றைய இளைய தலைமுறையின் மத்தியில் வாசிப்பு மிகவும் குறைவடைந்து செல்லும் போக்கு காணப்படுகின்றது. தொழில்நுட்ப மற்றும் சமூக ஊடகங்கள் பல மாற்றங்களை உண்டு பண்ணியுள்ளன. இதனால் இன்றைய தலைமுறையினரின் ஆர்வம் அதிகமாக தகவல் தொடர்பு, பொழுதுபோக்கு சாதனங்களை சுற்றி அதிகம் காணப்படுகின்றன. இன்று தொழில்நுட்ப சாதனங்களில் ஊடகங்கள் மூலம் இனணயத்தில் வரும் சுருக்கமான கட்டுரைகளை பெற்று நூலகம் செல்லாது விடுகின்றனர். இதனடிப்படையில் தேடலும் குறைந்து வாசிப்பு பழக்கமும் மட்டுப்பாடு அடைகிறது.
முதலில் வாசிப்பு என்றால் என்ன என நாம் நோக்கினால், மன ஒருமைப்பாட்டுடன் படைப்பாளியின் எண்ணங்களையும், உணர்வுகளையும் எழுத்துக்கள், எழுத்து உருவங்களை கவனமாக படித்து அவற்றின் பொருளை புரிந்துகொள்ளும் செயல்முறை ஆகும். வாசிப்பு மனிதனுக்கு பல்வேறு வகையான பயன்களை தருகின்றது. இதனால் தேடல் பழக்கம் ஏற்படும், அறிவு வளர்ச்சி, கல்வி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி, தனிநபர் வளர்ச்சி, சமூக- கலாசார விழிப்புணர்வு, மனநல மேம்பாடு, இலக்கிய ஆராய்வு திறன், மன அமைதி, படைப்பாற்றல் மேம்பாடு, மொழியாற்றல் விருத்தி முதலான பல்வேறு பட்ட நன்மைகளை ஏற்படுத்துகின்றது.
சராசரி மனிதன் ஒரு நிமிடத்தில் வாசிக்கும் சொற்களின் எண்ணிக்கை 200 தொடக்கம் 300. பல்வேறுபட்ட சமூக மற்றும் உளவியல் ஆராய்ச்சிகளின் அடிப்படையில் வாசிப்பின் மூலம் மனநிலை நன்கு மேம்படுகிறது என்று கூறப்படுகின்றது.
தனிமையில் புத்தக வாசிப்பு மன அழுத்தத்தை குறைக்கின்றது என லியூங் என்பவரின் ஆராய்ச்சிகள் (Journal of Psychomatic Research) யேர்னல் ஒப் சைக்கோ மெட்ரிக் என்பதில் எடுத்துக் கூறப்படுகின்றது.
மூத்த வயதானோரில் தொடர்வாசிப்பில் அவர்களின் நினைவாற்றல் மற்றும் மூளை செயல்பாடுகள் நீடிக்கின்றன என வில்சன் (RS Wilson ) என்பவர் ஆராய்ச்சி மூலம் உறுதிப்படுத்துகின்றார்.
வாசிப்பு பழக்கம் குறைவடைந்து செல்வது பல்வேறுபட்ட விளைவுகளை உண்டு பண்ணுகிறது. அந்த வகையில் சிந்திக்கும் திறன் குறைவடைதல், எழுத்துப் பிழைகள் அதிகரிப்பு, கிரகித்தல் குறைவடைதல், புதிய மொழிகளை கற்பதில் தாமதம், நினைவுத்திறன் பாதிப்பு, கவனிச்சிதறல்கள் ஏற்படல், கற்றலில் தாமதம், பிரச்சனை தீர்த்தல் பண்பு குறைவடைதல் முதலான பல்வேறுபட்ட விளைவுகள் ஏற்படுகின்றன.
பல்வேறுபட்ட உத்திகள் அடிப்படையில் வாசிப்பினை நாம் மேம்பாடு அடையச் செய்யலாம்.
தினசரி 20 - 30 நிமிடங்கள் வாசிப்பினை தொடர்பழக்கமாகக் கொண்டிருத்தல்.
வாசிப்பினை மேற்கொள்ளும்போது மனதில் கேள்வி எழுப்பி அதாவது இதன் பொருள் என்ன? நோக்கம் என்ன என்பவற்றை அறிந்து வாசிப்பது சிறந்தது.
வாசிப்பினை மேற்கொள்ளும்போது அதற்கான சூழலைத் தேர்வு செய்வது அவசியம் ஆகும். அந்த வகையில் வாசிப்பதற்கான சூழல் அமைதியாகவும், ஒளி மற்றும் காற்று உட்செல்லக்கூடியவனவாகவும் சுத்தமாகவும் இருத்தல் வேண்டும்.
வீட்டில் பொருத்தமான இடத்திலோ அல்லது நூல் நிலையத்திலோ வாசிப்பை மேற்கொள்வது சிறந்ததாக அமையும் நூலகம் என்பது அறிவுப்பதிவேடுகளின் சுரங்கமாகும். ஒரு நூலகம் திறக்கப்படும்போது 100 சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன. ஆசியாவின் மிகப்பெரியது, பழமை வாய்ந்ததுமான எங்கள் யாழ்ப்பாண பொது நூலகம் இன்றளவு சகோதர மொழியினகளாலும் பார்வையிடப்படுவதுடன், பெற்றோர்களும் தங்களது குழந்தைகளை அழைத்து வந்து பார்வையிடவும், வாசிக்கவும் செய்கின்றனர். அத்துடன் அங்கு இடம்பெறும் கண்காட்சிகள் மற்றும் மற்றும் போட்டிகள் என்பன வாசிப்பு பழகத்தை தூண்டுகின்றன.
குழு வாசிப்பு மூலம் குழுவாக இணைந்து பல்வேறுபட்ட விடியப் பகிர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன் நண்பர்களுடன் இணைந்து புத்தகப் பரிமாற்றம் மற்றும் வாசிப்பு, அது சார்ந்த விஷயங்கள் பற்றி உரையாடும் போது வாசிப்பு மீதான ஆர்வம் தூண்டுதலும் அதிகரிக்கும்.
வாசிப்பினை மேற்கொள்ளும்போது மன படங்கள், காட்சிகள் உருவாக்கி அதன் அடிப்படையில் வாசிப்பதன் மூலம் படித்ததை மனதில் இலகுவாக நிலை நிறுத்திக்கொள்வதுடன் (ஞாபகம்) ஆழமாகவும் அறிந்துகொள்ள முடியும்.
உணர்ச்சி மனநிலை கட்டுப்பாடானது வாசிப்பின் மூலம் ஏற்படுகின்றது. இதன் அடிப்படையில் மன அழுத்தமானது குறைவடைடவதுடன், மன அமைதியும், மன உறுதிப்பாடும் ஏற்படுகின்றது. அந்த வகையில் வாசிப்பு நினைவுத்திறன் மேம்பாடு மற்றும் கவன அதிகரிப்பு முதலானவற்றை ஏற்படுத்தி நிற்கின்றது. மன மகிழ்ச்சி, திருப்தியையும் ஏற்படுத்துகிறது.
வாசிப்பின் பிரதான வகைகளான சுருக்கமான வாசிப்பு, தேடல் வாசிப்பு என்பன காணப்படுகின்றது. சுருக்கமான வாசிப்பானது உரையின் முக்கியமான பகுதியை வேகமாக வாசித்தலை குறிக்கின்றது. அத்துடன் தேடல் வாசிப்பு குறிப்பிட்ட தகவலை தேடுவதற்கான பயிற்சி பெறுவதன் அடிப்படையில் வாசிப்பு அமைகின்றது. இதனுடன் இணைந்த முக்கிய வகையாக "பிரச்சனை தீர்க்கும் வாசிப்பு" காணப்படுகின்றது. இது வாசிக்கும்போது எழுத்தாளரின் கருத்துக்களை மட்டும் ஏற்காமல் அவற்றை சிந்தித்து, வாதங்களை மதிப்பாய்வு செய்து இது நம்பகமானதா? இதற்கான ஆதாரங்கள் என்ன? என்ற கேள்விகளை எழுப்பி வாசிக்கவும் உதவுகின்றது.
ஆராய்ச்சிகளின் அடிப்படையில்.....
E-Readersமற்றும் வாசிப்பு பயன்பாடுகளான Kindle, Google books போன்றவற்றையும் many books போன்ற இலவச வாசிப்பு வளங்களையும் பெற்று வாசிப்பினை துணிரீதியாக மேம்படுத்த முடியும்.
மாற்று மொழி வாசிப்பானது மொழித்திறன் மேம்பாட்டுக்கு நன்கு உதவுகின்றது என ஆய்வுகள் கூறுகின்றன. அத்துடன் இனணய ரீதியான பத்திரிகை வாசிப்பு, வாசிப்பு வளர்ச்சியில் ஒரு புதிய ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. வாசிப்பின் போது மூலளயில் ஏற்படும் நரம்பியல் மாற்றங்களால் நினைவாற்றல் மேம்படுகின்றது என்றும் கவனம் மற்றும் சிந்தனை திறனும் மேம்படுகிறது என M. wolf என்பவர் ஆய்விலே குறிப்பிடுகின்றார்.
சிறுவர்கள் கதைகளை வாசிக்கும் போது சிறுவர்களுக்கு பரிவு, பாசம் மற்றும் சமூகத் திறன்கள் வளர்வதாக சமூக விஞ்ஞான ஆய்வு கூறுகின்றது. அறிவுக்கு வாசிப்பானது ஒரு படிக்கட்டாகவும், நூல்கள் நல்ல நண்பர்கள் ஆகவும் செயல்படுகின்றது.
"வாசிப்பு நல்ல சுவாசிப்பு"
- நடராசா கோபிராம்
உளவியல் சிறப்புக் கலை மாணவன்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM