இலங்­கையில் எவரும் ஊழல் தொடர்­பான விசா­ர­ணை­களில் இருந்து நழுவிச் செல்ல முடி­யாது என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ளார்.

மேற்­கிந்­தியத் தீவுகள் அணி­யு­ட­னான போட்டி களின் போது ஆட்ட நிர்­ண­யத்­திற்கு வலி­யு­றுத்­தி­யமை தொடர்­பான முறைப்­பாடு தொடர்பில், வாக்­கு­மூலம் பெற இலங்கை கிரிக்கெட் அணித் தலைவர் அஞ்­சலோ மெத்­தியூஸ் எவ்.சி.ஐ.டிக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

இது தொடர்பில் சுவிட்­ஸர்­லாந்து டெவோ மாநாட்டில் பங்­கேற்கும் ரணி­லிடம் வெளி­நாட்டு செய்­தி­சேவை ஒன்று கேள்வி எழுப்­பி­யுள்­ளது.

இலங்கை நாட்டின் விளை­யாட்டு வீரர்­களின் மத்­தியில் சம­தன்­மையை பேணும் வகையில் இந்த விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­படும் என்று இதன்­போது ரணில் குறிப்­பிட்டார்.

இதற்­கி­டையில் இலங்­கையின் இரண்டு வீரர்க­ளை ஆட்ட நிர்­ண­யத்­தில் ஈடுபடுத்த முயற்சி மேற்கொள்ளப் பட்டதாகவும் அதனை தாம் மறுத்­து­விட்­ட­தா­ கவும் இரண்டு வீரர்களும் குறிப்­பிட்­டி­ருந்­தனர்.

இது தொடர்பில் ஏதாவது தெரி­யுமா என்­பதை அறிந்­து­கொள்ளும் பொருட்டே தாம் விசா­ர­ணைக்கு அழைக்கப்பட்ட தாக மெத்தி யூஸ் விசாரணையின் பின்னர் தெரிவித்திருந்தார்.