இன்றைய சூழலில் எம்முடைய இளைய தலைமுறையினர் வார இறுதி நாட்களில் விருந்துகளில் பங்கு பற்றி மது அருந்துதல் - புகை பிடித்தல்- அகால வேளையிலும் அசைவ உணவுகளை பசியாறுதல் - போன்றவற்றில் பெருவிருப்பம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு இளம் வயதிலேயே குறிப்பாக 35 வயதுக்குள்ளாகவே மாரடைப்பு பாதிப்பு ஏற்படுகிறது. இது தொடர்பான விழிப்புணர்வு அவர்களிடத்தில் இருந்தாலும் தங்களுக்கு எதுவும் நேராது என்ற அசட்டு துணிச்சலில் இது போன்ற முறையற்ற - ஆரோக்கியமற்ற - பழக்கங்களுக்கு ஆளாகிறார்கள்.
மாரடைப்பு பாதிப்பு ஏற்பட்ட பிறகுதான் இது குறித்து அச்சம் கொள்கிறார்கள். இந்நிலையில் இதுபோன்ற இளம் வயதினருக்கு ஏற்படும் மாரடைப்பு பாதிப்பிற்கு டோட்டல் அர்டெரியல் ரீவாஸ்குலரைசேஷன் எனப்படும் நவீன சத்திர சிகிச்சை மூலம் வைத்திய நிபுணர்கள் நிவாரணம் அளித்து வருகிறார்கள்.
பொதுவாக இளம் வயதினர் மாரடைப்பு பாதிப்பு ஏற்பட்டு, 'கோல்டன் ஹவர்ஸ்' எனப்படும் குறிப்பிட்ட தருணத்திற்குள் அருகில் இருக்கும் இதய சத்திர சிகிச்சைக்கான பிரத்யேக வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட உடன்... அவர்களுக்கு பாதிப்பின் வீரியம் , தன்மை குறித்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.
பொதுவாக இதுபோன்ற தருணங்களில் அவர்களின் இதயத்தில் உள்ள பிரதான அறைகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட அடைப்பு பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.
இதற்காக பைபாஸ் எனப்படும் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படும். அதிலும் குறிப்பாக டோட்டல் அர்டெரியல் ரீவாஸ்குலரைசேசன் எனப்படும் சத்திர சிகிச்சையை மேற்கொள்வார்கள்.
இத்தகைய தருணங்களின் போது அவர்களுடைய கால்பகுதியில் இருந்து ரத்த நாளங்களை வெட்டி எடுப்பதற்கு பதிலாக... அவர்களுடைய விலா எலும்புக்கு அருகிலேயே இருக்கும் பிரத்யேக ரத்த நாளங்களை அகற்றி, அதனை இதயத்தில் பொருத்தி முழுமையான நிவாரண சிகிச்சையை அளிப்பார்கள்.
மேலும் இத்தகைய சத்திர சிகிச்சைக்கு பிறகு வைத்தியர்கள் புகை- மது - அகால வேளையிலான அசைவ உணவு- ஆகியவற்றை முற்றாக தவிர்க்க வேண்டும் என்றும், நாளாந்தம் 45 நிமிடத்திற்கு குறையாமல் நடை பயிற்சி- ஆரோக்கியமான உணவு முறையையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் பரிந்துரைப்பார்கள். இதனை உறுதியாக ஆயுள் முழுவதும் கடைப்பிடித்தால்... மீண்டும் மாரடைப்பு பாதிப்பு ஏற்படாமல் தற்காத்துக் கொள்ள இயலும்.
வைத்தியர் அருண்குமார் தொகுப்பு அனுஷா.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM