இலங்கையில் மகளிர் அரசியல் தலைமைத்துவத்தை முன்னேற்றுதல் மற்றும் மகளிர் தொடர்பான ஜனநாயக பங்குபற்றுதலை ஊக்குவித்தல் போன்றன மேற்கொள்ளப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் சமன்சிறி ரத்நாயக்க தெரிவித்தார்.
கண்டி, மாத்தனை மாவட்டங்களைச் சேர்ந்த உள்ளூராட்சி சபைகளின் பெண் உறுப்பினர்களுக்கான செயலமர்வு அண்மையில் கண்டியில் நடைபெற்றது. அதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
1988ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட மாகாண சபைகள் தொடர்பான சட்டம் 2017ஆம் ஆண்டு திருத்தப்பட்டது. இருப்பினும் தேர்தல் தொகுதி எல்லை நிர்ணயம் தொடர்பாக அதில் தெளிவுகள் இல்லை. இதன் காரணமாக மாகாண சபைகள் தேர்தலை நடத்தக்கூடிய வழிவகைகள் போதியதாக இல்லை.
இலங்கையில் மகளிர் அரசியல் தலைமைத்துவத்தை முன்னேற்றுதல் மற்றும் ஜனநாயக பங்குபற்றுதலை ஊக்குவித்தல் போன்ற நோக்கங்களை அடையும் வகையில் இச்செயலமர்வு இங்கு ஒழுங்கு செய்யப்பட்டது.
நாட்டுக்குத் தேவையான சட்டத்தை இயற்றும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கே உள்ளது. பாராளுமன்றம் அங்கீகரிக்கும் எந்த ஒரு சட்டத்தையும் அமுல்படுத்தும் அதிகாரம் ஆணைக்குழுவுக்கு உண்டு. எனவே உருவாகும் சிக்கல் பாராளுமன்றில் தீர்க்கப்படுமாயின் தேர்தலை நடத்துவதில் ஆணைக்குழுவுக்கு பிரச்சினையல்ல.
பழைய முறைப்படி அல்லது விகிதாசார அடிப்படையில் தேர்தல் நடத்தப்படுமாயின் அதில் மகளிர் பிரதிநிதித்துவம் தொடர்பான குறைபாடுகள் உள்ளன. அதில் மகளிர் பிரதிநிதித்துவம் பற்றிய விதிகள் குறிப்பிடப்படவில்லை. ஆனால் 2017ஆம் ஆண்டு 17ஆம் இலக்க சட்டமூலத்தின்படி, மகளிர் பிரதிநிதித்துவம் பற்றி கூறப்பட்டுள்ளது.
மொத்தமாக இங்கு 20 உள்ளூராட்சி நிறுவனங்களின் 56 பெண் உறுப்பினர்களின் பெயர்கள் எமக்கு கிடைத்திருக்க வேண்டும். ஆனால் அதில் இதுவரை 11 உள்ளூராட்சி நிறுவனங்களைச் சேர்ந்த பெண் உறுப்பினர்கள் 23 பேர் நியமிக்கப்பட வேண்டியுள்ளது. ஆனால் அந்த அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் இன்னும் தங்கள் கட்சிகளைச் சேர்ந்த பெண் உறுப்பினர்களது பெயர்களை எங்களுக்கு அனுப்பவில்லை. அவர்கள் அப்பெயர்களை அனுப்பும் வரை, வர்த்தமானியை வெளியிட வாய்ப்பில்லை. எனவே, பதினொரு உள்ளூராட்சி நிறுவனங்களில் பெண்களின் 25% பிரதிநிதித்துவம் இன்னும் நிறைவடையவில்லை என்றார்.
மத்திய மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சமிலா அத்தபத்து, கண்டி உதவி தேர்தல் ஆணையாளர் சம்பத், தேர்தல் முறைகளுக்கான சர்வதேச அமைப்பின் (IFES) உதவி வதிவிட பணிப்பாளர் இந்திக உபயசேகர மற்றும் அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.












கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM