வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை வாளாகத்தில் அமைந்துள்ள ஆலயத்தில் நேற்று இரவு இனந்தெரியாத நபர்களினால் உண்டியல் உடைத்து திருடப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் ,

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை வளாகத்தில் அமைந்துள்ள இந்து ஆலயத்தில் உள்ள மின்விளக்கினை நேற்று மாலை அங்கு கடமையிலிருந்து பாதுகாப்பு உத்தியோகத்தர் போட்டுள்ளார். பின்னர் இன்று அதிகாலை மின் விளக்கினை அணைக்க சென்ற சமயத்தில் ஆலயத்தின் உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதை அவதானித்து உடனே பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

சம்பவயிடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.