ஆசியக் கிண்ண இரு­ப­துக்கு 20 தொட ரும், அதனைத் தொடர்ந்து இரு­ப­துக்கு 20 உல­கக் கிண்ணத் தொடரும் அடுத்த மாதம் நடை­பெற இருக்­கி­றது. இதற்கு தயா­ராகும் வகையில் இந்­திய– இலங்கை அணிகள் மூன்று போட்­டிகள் கொண்ட இ20 தொடரில் விளை­யாட முடிவு செய்­துள்ளன.

இந்த மூன்று போட்­டிகள் நடை­பெறும் திகதி மற்றும் இடங்கள் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. அதன்­படி முதல் போட்டி பெப்­ர­வரி மாதம் 9ஆம் திகதி புனேவில் தொடங்­கு­கி­றது. பெப்­ர­வரி 12ஆம் திகதி டெல்­லியில் 2ஆவது போட்­டியும், பெப்­ர­வரி 14ஆம் திகதி விசா­கப்­பட்­டி­னத்தில் 3ஆ-வது மற்றும் கடைசி போட்­டியும் நடக்­கி­றது.

2014 ஆம் ஆண்டு நடை­பெற்ற இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் இறு­திப்­போட்­டியில் இந்­திய – இலங்கை அணிகள் பலப்­ப­ரீட்சை நடத்­தின. இதில் இலங்கை அணி வெற்றி பெற்­றது. அதன்பின் தற்­போ­துதான் இரு அணி­க­ளுக்கும் இடையில் இருபதுக்கு 20 போட்டி நடை­பெற இருக்­கி­றது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

புனே மைதானம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தான் டெஸ்ட் போட்­டியை நடத்தும் அதி­கா­ரத்தை பெற்­றது. அங்கு இது­வரை இரண்டு சர்­வ­தேச போட்­டிகள் தான் நடைபெற்றுள்ளன. தற்போது நடைபெற இருப்பது 2-ஆவது இருபதுக்கு 20 போட்டியாகும்.