இலங்கை - நியூஸிலாந்து உலகக் கிண்ணப் போட்டி மழையினால் இடையில் கைவிடப்பட்டது; நியூஸிலாந்தின் அரை இறுதி வாய்ப்பு சந்தேகம்?

Published By: Vishnu

15 Oct, 2025 | 11:04 AM
image

(ஆர். பிரேமதாச அரங்கிலிருந்து நெவில் அன்தனி)

கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்ற இலங்கை - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி  கடும் மழையினால் இடையில் கைவிடப்பட்டது.

அப் போட்டியில் 259 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாட நியூஸிலாந்து தயாராகிக்கொண்டிருந்தபோது கடும் மழை பெய்ததால் ஆட்டத்தை கைவிடுவதாக இரவு 9.30 மணிக்கு ஐசிசி போட்டி தீர்ப்பாளர் அறிவித்தார்.

இதற்கு அமைய இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

இதன் காரணமாக இலங்கையின் அரை இறுதி வாய்ப்பு பெரும்பாலும் அற்றுப் போயுள்ள நிலையில் நியூஸிலாந்தின் வாய்ப்பும் சந்தேகத்திற்கிடமாகியுள்ளது.

இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 258 ஓட்டங்களைக் குவித்தது.

இந்த வருட மகளிர் உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை பெற்ற அதிகூடிய மொத்த எண்ணிக்கை இதுவாகும்.

உலகக் கிண்ணத்தின் முதல் இரண்டு போட்டிகளில் 4ஆம் இலக்கத்தில் துடுப்பெடுத்தாடிய விஷ்மி குணரட்ன முதல் தடவையாக இன்று ஆரம்ப வீராங்கனையாக களம் இறங்கி அணித் தலைவி சமரி அத்தப்பத்துவுடன் 139 பந்துகளில் 101 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தார்.

எனினும் மத்திய வரிசையில் நிலக்ஷிகா சில்வா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி இலங்கை சார்பாக உலகக் கிண்ணத்தில் குவித்த அதிவேக அரைச் சதமே அவரது அணியை சிறந்த நிலையில் இட்டது.

அவர் 26 பந்துகளில் அரைச் சதத்தைப் பூர்த்தி செய்ததுடன் மொத்தமாக 28 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட ஆட்டம் இழக்காமல் பெற்ற 55 ஓட்டங்களே இலங்கையை நல்ல நிலையில் இட்டது.

முன்னதாக சமரி அத்தபத்து 53 ஓட்டங்களையும் விஷ்மி குணரட்ன 42 ஓட்டங்களையும் ஹசினி பெரேரா 44 ஓட்டங்களையும் ஹர்ஷித்தா சமரவிக்ரம 26 ஓட்டங்களையும் பெற்றனர்.

இப் போட்டியில் நியூஸிலாந்தின் களத்தடுப்பு அவ்வளவு சிறப்பாக அமையாதது இலங்கைக்கு கைகொடுப்பதாக அமைந்தது.

பந்துவீச்சில் சொஃபி டிவைன் 54 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ப்றீ இல்லிங் 39 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடப்பு சம்பியன் புளூ ஸ்டார் கழகத்தை...

2026-07-18 05:26:17
news-image

கோலாகல ஆரம்ப விழாவுடன் எல்பிஎல் தொடங்கியது;...

2026-07-18 00:35:39
news-image

வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஆறுதல் வெற்றியை...

2026-07-17 23:41:20
news-image

ஜெவ்னா கிங்ஸ் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வெளியாகும்...

2026-07-17 15:31:54
news-image

இந்தியாவுடனான ஒருநாள் தொடரை இங்கிலாந்து சமப்படுத்தியது;...

2026-07-17 12:24:24
news-image

ஆட்ட நிர்ணயம் தொடர்பில் லங்கா பிறீமியர்...

2026-07-17 15:31:56
news-image

கணிசமான ஓட்டங்கள் குவிக்கப்பட்ட 19இன்கீழ் இலங்கை...

2026-07-16 20:31:40
news-image

கொழும்பு SSC மைதானத்தில் LPL தொடக்க...

2026-07-16 20:26:18
news-image

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணம்,...

2026-07-16 18:24:57
news-image

ஸ்ரீலங்கா கிரிக்கெட் தேர்தலை விரைவில் நடத்துமாறு...

2026-07-16 15:53:48
news-image

போக்லண்ட் பதாகையை ஏந்தியதால் ஆர்ஜன்டினா மீது...

2026-07-16 18:22:47
news-image

தேசிய ஒலிம்பிக் குழுவின் முன்னாள் தலைவர்...

2026-07-16 15:04:06