யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸ்பிரிவில் துன்னாலைப்பகுதியில் பொலிஸாரும் விஷேட பொலிஸ் அதிரடிப்படையினரும் இணைந்து சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற   துப்பாக்கிச் சூட்டு சம்பவம், பொது மக்களின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை, சட்ட விரோதமாக மணல் கடத்தியமை, வால் வெட்டுச் சம்பவம், கடற்படையினரோடு மோதலில் ஈடுப்பட்டமை போன்ற செயற்பாடுகளில்  ஈடுபட்டவர்களை மடக்கிப் பிடிக்கும் நோக்கிலேயே பொலிஸாரும் அதிரடிப்படையினரும் இணைந்து குறித்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

குறித்த சுற்றி வளைப்பானது இன்று அதிகாலை முதல்  காலை 9.30 மணி வரை  இடம்பெற்றுள்ளது.  இதன் போது மேற் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்களோடு தொடர்புடைய 3 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும் 4 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 2 கென்டர் வகை வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.