மொனராகலை, தணமல்வில பகுதியில் பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்த இளைஞன் ஒருவன் தணமல்வில பொலிஸாரால் நேற்று திங்கட்கிழமை (13) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் தணமல்வில - காமினிபுர பகுதியில் வசிக்கும் 34 வயதுடைய இளைஞன் ஆவார்.
தணமல்வில பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் கஞ்சா வைத்திருப்பதை கண்ட அதிபர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், பாடசாலை மாணவனை விசாரணைக்கு உட்படுத்தியதில், தணமல்வில - காமினிபுர பகுதியில் வசிக்கும் இளைஞன் ஒருவனிடமிருந்து கஞ்சா கொள்வனவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சந்தேக நபரான இளைஞன் தனது வீட்டில் வைத்து பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான இளைஞனிடமிருந்து 850 கிராம் கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தணமல்வில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM