இன்றைய திகதியில் எம்மில் பலரும் இணையதள வசதியை தங்களுடைய அத்தியாவசிய தேவைகளுக்கும் பாவித்து வருவதால்... பயணங்கள் குறைந்துவிட்டது.
அதையும் கடந்து பணி நிமித்தம் காரணமாகவோ அல்லது தொழில் நிமித்தம் காரணமாகவோ பயணம் மேற்கொள்பவர்கள் ... தங்களது அனைத்து பயணமும் லாபகரமாக இருக்க வேண்டும் என திட்டமிட்டு பயணத்தை மேற்கொள்வார்கள்.
ஆனால் பல தருணங்களில் இவர்களின் எதிர்பார்ப்பிற்கு மாறாகவே அதாவது பலன் இல்லாமல் பயணங்கள் அமைகிறது. இதுபோன்ற தருணங்களில் தொலைபேசியிலோ அல்லது கைபேசியிலோ இதனை தெரிவித்திருக்கக் கூடாதா..? என்ற எண்ணம் மேலோங்கும்.
ஏனெனில் தற்போது பயணம் மேற்கொள்வது லாபமாக இருந்தால் மட்டுமே மகிழ்ச்சியை அளிக்கிறது. இல்லையெனில் சுமையை தருவதுடன் ஆரோக்கியத்திற்கும் அச்சுறுத்தலை உண்டாக்குகிறது.
இத்தகைய தருணங்களில் நீங்கள் மேற்கொள்ளும் பயணம் பாதுகாப்பானதாகவும், லாபகரமானதாகவும் இருக்க வேண்டும் என எண்ணினால்.. அதற்கும் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் ஒரு சூட்சமமான குறிப்பை முன்மொழிந்திருக்கிறார்கள்.
இதற்கு தேவையான பொருட்கள் : புதினா இலை
நீங்கள் தொழில் விடயமாக அதாவது உற்பத்தி - தயாரிப்பு- விற்பனை- விநியோகம் ,- என தொழில் துறையில் எந்த பிரிவில் பயணத்தை மேற்கொண்டாலும்... அதில் லாபம் இருக்க வேண்டும்.
நீங்கள் மேற்கொள்ளும் திட்டமிட்ட அல்லது திட்டமிடாத பயணம் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என எண்ணினால்... நீங்கள் உங்களுடைய பயணத்தை தொடங்கும் தருணத்திலேயே புதிதான ஆறு புதினா இலைகளை உங்களுடன் வைத்திருங்கள்.
உங்களுடைய பெட்டி, சட்டை பை போன்றவற்றில் ஆறு புதினா இலைகளை பத்திரப்படுத்திக் கொண்டு பயணத்தை மேற்கொள்ளுங்கள். இதுபோல் பயணித்தால் உங்களுடைய தொலைதூர பயணம் அல்லது குறுகிய தூர பயணம் வெற்றிகரமாக அமையும்.
நீங்கள் எதிர்பார்த்ததை விட கூடுதலாகவே லாபம் கிடைக்கும். ஏனெனில் புதினா இலை என்பது சுக்கிரனின் அம்சமாக கருதப்படுகிறது.
இந்த புதினா இலை பாவனை லாபத்துடன் மட்டும் நின்று விடுவதில்லை. உங்களுடைய உறக்கத்திற்கும் உதவி புரிகிறது. நீங்கள் உறங்கும் போது ஏதேனும் எதிர்மறையான கனவினை கண்டு அச்சப்பட்டால்... பதற்றம் அடைந்தால்... அதற்கும் உதவுகிறது.
அதாவது நீங்கள் உறங்குவதற்கு முன் புதிதாக இருக்கும் ஆறு புதினா இலைகளை எடுத்து உங்களது தலையணையில் வைத்துக் கொண்டு உறங்குங்கள். கெட்ட கனவு வராது என்பதுடன் ஆழ்ந்த உறக்கமும் கிடைக்கும்.
அடுத்த முறை நீங்கள் காய்கறி சந்தைக்கோ அல்லது வணிக வளாகங்களுக்கு சென்றாலோ புதினா இலையை பார்த்து இது உற்சாகம் மட்டும் தருவதில்லை. லாபத்தையும் தரும் என்ற எண்ணத்துடன் அதனை வாங்கி பாவிக்க தொடங்குங்கள்.
தொகுப்பு: சுபயோக தாசன்



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM