தமிழ் திரையுலகின் பிரபலமான நடிகரான விஷ்ணு விஷால் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'ஆர்யன் ' எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற 'ஐயம் த கய்' எனும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் பிரவீனண். கே இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஆர்யன்' திரைப்படத்தில் விஷ்ணு விஷால், செல்வராகவன்,ஷ்ரத்தா ஸ்ரீநாத், மானசா சவுத்ரி, அவினாஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் வைபோதா இசையமைத்திருக்கிறார் அதிரடி எக்சன் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஷ்ணு விஷால் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் டீசர் வெளியாகி இரண்டு மில்லியன் பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வரும் நிலையில்... இப்படத்தில் இடம்பெற்ற 'கொல்லாத கொள்ள அழகால' எனத் தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த பாடலை பாடலாசிரியர் வாமனா எழுத, பின்னணி பாடகரும், இசையமைப்பாளருமான ஜிப்ரான் மற்றும் பின்னணி பாடகர் குரு ஹரி ராஜ் ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள்.
இந்தப் பாடலுக்கு இடையே ஆங்கில வரிகள் இடம் பிடித்திருந்தாலும் ஜிப்ரானின் மயக்கும் மெல்லிசையாக உருவாகி இருப்பதால்.. அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM