கேகாலை மாவட்டத்தில் இனந்தெரியாத நபர்கள் மூவர், பொலிஸ் அதிகாரிகள் என கூறிக்கொண்டு வீடொன்றுக்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை கத்தி முனையில் மிரட்டி ஒரு கோடியே 90 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்தனர்.
கொள்ளையர்கள் 40 பவுண் நகைகள், 15 இலட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டின் உரிமையாளரான 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை இது தொடர்பில் கேகாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
அத்துடன், குறித்த வீட்டின் உரிமையாளர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
கேகாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM