புதுமுக நடிகர் அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு நிறைவு

14 Oct, 2025 | 02:45 PM
image

'டூரிஸ்ட் ஃபேமிலி' எனும் வெற்றி படத்தை இயக்கிய இயக்குநர் அபிஷன் ஜீவந்த் கதையின் நாயகனாக அறிமுகமாகும் பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகமாக தெரிவித்துள்ளனர்.

அறிமுக இயக்குநர் மதன் இயக்கத்தில் உருவாகி வரும் பெயரிடப்படாத திரைப்படத்தின் அபிஷன் ஜீவந்த்-  அனஸ்வரா ராஜன் ஆகிய இருவரும் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன்  இசையமைக்கிறார். காதல் கதையாக தயாராகும் இந்த திரைப்படத்தை எம் ஆர் பி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் மற்றும் ஸீயான் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.

தொடர்ந்து 35 நாட்களுக்கு ஒரே கட்டமாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று நிறைவடைந்திருப்பதாகவும், தற்போது படப்பிடிப்புக்குப் பிந்தைய தொழில்நுட்ப பணிகள் தொடங்கப்பட்டிருப்பதாகவும், விரைவில் இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ஆகியவை வெளியிடப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்