துருவ் விக்ரமின் 'பைசன் காளமாடன்' பட முன்னோட்டம் அதிர்வை ஏற்படுத்தியதா...?

14 Oct, 2025 | 02:33 PM
image

நட்சத்திர வாரிசாக அறிமுகமாகி, தமிழ் திரையுலகில் நடிகராக வலம் வரும் துருவ் விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பைசன் காளமாடன் ' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த முன்னோட்டம் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் மூன்று மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டிருந்தாலும் .... ரசிகர்களிடத்தில் அதிர்வை ஏற்படுத்தியதா? இல்லையா? என்ற விவாதம் இணையத்தில் பேசு பொருளாகி இருக்கிறது.

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ' பைசன் காளமாடன் ' எனும் திரைப்படத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், பசுபதி, அமீர், லால், ரஜிஷா விஜயன், அழகம் பெருமாள், 'அருவி' மதன், அனுராக் அரோரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

எழில் அரசு .கே ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்திருக்கிறார். கிராமிய பின்னணியில் ஒடுக்கப்பட்ட மக்களின்  வாழ்வியலை பேசும் படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 17 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் தொழில்நுட்ப சிக்கல் காரணமாக சற்று தாமதமாகவே இணையத்தில் வெளியானது.

பெரும்  எதிர்பார்ப்பில் இருந்த இந்தப் படத்தின் முன்னோட்டம் - இயக்குநர் மாரி செல்வராஜின் வழக்கமான கடந்த தசாப்தங்களில் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியல் நெருக்கடிகளை விவரிப்பதாகவே இருப்பதால் தமிழ் திரையுலகில் பா . ரஞ்சித்தை பின் தொடரும் சாதிய பற்றாளராகவே தன்னையும் வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ்.  இதன் காரணமாகவே இவரது படைப்பின் முன்னோட்டம் ஒடுக்கப்பட்ட மக்களின் இளைய தலைமுறையினரை மட்டும் கவர்ந்து வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்