இந்தியாவும் பாகிஸ்தானும் அமைதியாக வாழுவார்கள் : சர்வதேச அமைதி மாநாட்டில் டிரம்ப் நம்பிக்கை

14 Oct, 2025 | 01:57 PM
image

எகிப்தின் ஷரம் அல்-ஷேக் நகரில் திங்கட்கிழமை (ஒக்டோபர் 13) நடைபெற்ற சர்வதேச அமைதி மாநாட்டில், இந்தியாவும் பாகிஸ்தானும் எதிர்காலத்தில் மிகவும் அமைதியாக ஒன்றிணைந்து வாழ்வார்கள் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் எகிப்து ஜனாதிபதி அப்தல் ஃபத்தா அல்-சிசி ஆகியோரின் இணைத் தலைமையில் சர்வதேச அமைதி மாநாடு நடைபெற்றது.

இதில் பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உட்பட 20 க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். 

இந்தியா சார்பில் வெளியுறவுத் துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒப்பந்தத்தில் முதல் ஆளாக டிரம்ப் கையெழுத்திட்டார்.

மாநாட்டில் பேசிய டிரம்ப், பேச்சுவார்த்தை மூலம் மோதலை முடிவுக்குக் கொண்டு வந்து பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டியதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோருக்குப் பாராட்டு தெரிவித்தார்.

அப்போது அவர், இந்தியா சிறந்த நாடு, அங்கு எனது நல்ல நண்பர் ஒருவர் உச்சத்தில் இருக்கிறார். அவர் அற்புதமான வேலையைச் செய்துள்ளார். பாகிஸ்தான் மற்றும் இந்தியா நாடுகள் மிகவும் அமைதியாக ஒன்றோடொன்று இணைந்து சிறப்பாக வாழ்வார்கள் என்று நான் நினைக்கிறேன்." என்று குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து, தனக்குப் பின்னால் நின்றிருந்த பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப்பை நோக்கி சைகை காட்டி, "அவர் அதைச் செய்யப் போகிறார் " என்றும் டிரம்ப் கூறினார்.

இந்த மாநாட்டில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், "இந்தியா - பாகிஸ்தான் மோதலில் டிரம்ப் தலையிடாமல் இருந்திருந்தால், அது நான்கு நாட்களில் முடிந்திருக்காது, அணு ஆயுதப் போரால் யாரும் உயிருடன் இருந்திருக்க மாட்டார்கள்" எனத் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான யோங்கிங்...

2025-11-14 18:01:55
news-image

இந்தியா - கர்நாடகாவில் பெண் பணியாளர்களுக்கு...

2025-11-14 14:02:26
news-image

அமெரிக்காவில் 43 நாள் நீடித்த அரசு...

2025-11-13 17:56:17
news-image

“உங்களுக்கு எத்தனை மனைவிகள்?” - சிரியா...

2025-11-13 16:09:16
news-image

டெல்லியில் நடந்தது ஒரு தெளிவான பயங்கரவாத...

2025-11-13 13:41:46
news-image

கானாவில் இராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு - சன...

2025-11-13 16:05:49
news-image

சைப்ரஸில் நிலநடுக்கம் 

2025-11-12 17:26:28
news-image

அமெரிக்காவில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில்...

2025-11-12 16:09:57
news-image

அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை...

2025-11-12 16:06:26
news-image

தென்சீனாவில் சில மாதங்களுக்கு முன் திறக்கப்பட்ட...

2025-11-12 14:32:17
news-image

இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் -...

2025-11-12 12:17:16
news-image

எகிப்தில் சுற்றுலா பஸ் மீது லொறி...

2025-11-12 11:43:56