மெக்சிகோவில் பல நாட்களாக பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 44 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரிசில்லா மற்றும் ரேமண்ட் ஆகிய வெப்பமண்டல சூறாவளிகளால் ஏற்பட்ட பலத்த மழையினால் ஐந்து மாநிலங்களில் மண்சரிவுகள் மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
வெராக்ரூஸ் மாநிலத்தில் 18 பேரும், ஹிடால்கோவில் 16 பேரும், பியூப்லாவில் ஒன்பது பேரும், குவெரெட்டாரோவில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட 139 நகரங்களுக்கு உதவும் வகையில் மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாமின் அரசாங்கம் திட்டம் ஒன்றை நிர்வகித்து வருகிறது.
உயிர்காக்கும் படகுகளைப் பயன்படுத்தி மக்களை வீரர்கள் வெளியேற்றுவதையும், சேற்றில் மூழ்கிய வீடுகளையும், நகர வீதிகள் வழியாக இடுப்பு உயர நீரில் மீட்புப் பணியாளர்கள் சிரமப்பட்டுச் செல்வதையும் மெக்சிகன் இராணுவத்தால் வெளியிடப்பட்ட புகைப்படங்கள் காட்டியுள்ளது.
“வெராக்ரூஸ், ஹிடால்கோ, பியூப்லா, குவெரெட்டாரோ மற்றும் சான் லூயிஸ் போடோசி ஆகிய இடங்களில் ஆளுநர் மற்றும் ஆளுநர்கள் மற்றும் பல்வேறு கூட்டாட்சி அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து அவசரநிலை தொடர்பில் நாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம். தேசிய அவசரக் குழு தயார் நிலையில் உள்ளது, ” என மெக்சிகோ ஜனாதிபதி ஷீன்பாம் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM