அமெரிக்காவின், டெக்சாஸ் மாகாணத்தில் வீதியில் சென்ற லொறி மற்றும் கார்கள் மீது விமானம் விழுந்ததால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் போர்ட் வொர்த் அலையன்ஸ் விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டது. டாரன் என்ற இடத்துக்கு அருகே சென்றபோது அந்த விமானம் விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது.
இதனால் அங்குள்ள நெடுஞ்சாலையில் விமானம் விழுந்து நொறுங்கியது. இதில் 2 பேர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
அப்போது அந்த வீதியில் சென்ற லொறி மற்றும் கார்கள் மீது விமானம் விழுந்ததால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இதனால் அந்த இடம் முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சியளித்தன. இதனையடுத்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த விபத்து தொடர்பில் விமான போக்குவரத்து திணைக்களம் விசாரணை நடத்தி வருகிறது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM