பங்களாதேஷிடம் பலத்த சவாலை எதிர்கொண்ட தென் ஆபிரிக்கா 3 பந்துகள் மீதமிருக்க பரபரப்பான வெற்றியை ஈட்டியது

Published By: Vishnu

14 Oct, 2025 | 01:46 AM
image

(நெவில் அன்தனி)

விசாகப்பட்டினம் மாவட்ட கிரிக்கெட் சங்க விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (13) நடைபெற்ற ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷிடம் பலத்த சவாலை எதிர்கொண்ட தென் ஆபிரிக்கா 3 பந்துகள் மீதம் இருக்க 3 விக்கெட்களால் பரபரப்பான வெற்றியை ஈட்டியது.

மாரிஸ்ஆன் கெப், க்ளோ ட்ரையொன், நாடின் டி க்ளார்க் ஆகியோரின் சிறந்த துடுப்பாட்டங்கள் தென் ஆபிரிக்காவை வெற்றிபெறச் செய்தன.

பங்களாதேஷினால் நிர்ணயிக்கப்பட்ட 233 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 49.3 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 235 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

முதல் 23 ஓவர்களில் பங்களாதேஷ் பந்துவீச்சாளர்களிடம் சிரமத்தை எதிர்கொண்ட தென் ஆபிரிக்கா 5 விக்கெட்ளை இழந்து 78 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இதன் காரணமாக பங்களாதேஷ் தலைகீழ் வெற்றியை ஈட்டலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், துடுப்பாட்டத்தில் சிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்திய மாரிஸ்ஆன் கெப் (56 ஓட்டங்கள்), க்ளோ ட்ரையொன் (62), நாடின் டி க்ளார்க் (37 ஆ.இ.) ஆகியோர் தென் ஆபிரிக்காவுக்கு மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டிக்கொடுத்தனர்.

அவர்களைவிட அணித் தலைவி லோரா வுல்வார்ட் (31), ஆன்எக் பொஷ் (28) ஆகியோரும் சிறந்த பங்களிப்பை வழங்கியிருந்தனர்.

பந்துவீச்சில் நஹிதா அக்தர் 44 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பங்களாதேஷ் 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 236 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் ஷொர்னா அக்தர் (51 ஆ.இ.), ஷர்மின் அக்தர் (50), அணித் தலைவி நிகார் சுல்தானா (32), பர்கானா ஹொக் (30) ஆகியோர் திறமைமையை வெளிப்படுத்தினர்.

பந்துவீச்சில் நொன்குலுலேக்கோ மிலாபா 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினர்.

ஆட்டநாயகி: க்ளோ ட்ரையொன்

ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்டின் 13ஆவது அத்தியாயத்தில் கிடடத்ட்ட அரைவாசி போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் அவுஸ்திரேலியா 7 புள்ளிகளுடன் முதலாம் இடத்திலும் இங்கிலாந்து மற்றும் தென் ஆபிரிக்கா ஆகியன தலா 6 புள்ளிகளுடன் முறையே 2ஆம், 3ஆம் இடங்களிலும் இருக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டயலொக் தலைமையகத்தில் ஐசிசி ஆடவர் ரி20...

2026-01-23 20:19:55
news-image

19 வயதின் கீழ்  ஆண்க  உலகக்...

2026-01-23 17:19:50
news-image

ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக்...

2026-01-23 14:58:50
news-image

தீர்மானம் மிக்க நியூ ஸ்டார் -...

2026-01-23 17:21:25
news-image

ஐசிசி 19 வயதின்கீழ் ஆண்கள் உலகக்...

2026-01-23 12:52:20
news-image

ICC T20 உலகக்கிண்ணம் இலங்கையில் மக்கள்...

2026-01-23 16:13:22
news-image

இங்கிலாந்துடனான முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டியில்...

2026-01-22 23:03:17
news-image

பராசூட் மூலம் விமானப்படை வீரர்களால் அரங்கிற்கு...

2026-01-22 19:07:02
news-image

தேசிய அலைச் சறுக்கல் பெண்கள் பிரிவில்...

2026-01-22 17:17:49
news-image

இங்கிலாந்துடனான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்...

2026-01-22 14:33:52
news-image

ஐசிசி ரி20 ஆடவர் உலகக் கிண்ணத்திற்காக...

2026-01-21 21:19:09
news-image

ICC T20 உலகக்கிண்ணப் போட்டியில் வழங்கப்படும்...

2026-01-21 20:58:30