(நெவில் அன்தனி)
தியகம மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 38ஆவது அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவின் மெய்வல்லநர் போட்டிக்களில் 4ஆம் நாளான திங்கட்கிழமை (13) நடைபெற்ற 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வட மாகாண பாடசாலைகள் முழுமையான ஆதிக்கம் செலுத்தி தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை சவீகரித்தன.

அப் போட்டியில் அருணோதயா கல்லூரி வீராங்கனை எஸ். நிருஷிகா 3.80 மீற்றர் உயரத்தைத் தாவி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
சாவகச்சேரி இந்து கல்லூரி மாணவி பி. அபிஷாலினி (3.60 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தையும் பாசையூர் புனித அந்தோனியார் மகளிர் வித்தியாலய மாணவி என். ஆன் மேரி, விக்டோரியா கல்லூரி மாணவி வை. நிதுஷா ஆகிய இருவர் (2.80 மீ.) சம உயரத்தைத் தாவி வெண்கலப் பதக்கங்களையும் வென்றனர்.

14 வயதுக்குட்ட சிறுவர்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் வள்ளிபுனம் மகா வித்தியாலய மாணவன் ஆர். சந்தோஸ் (14.70 மீ.) வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார்.
20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 100 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியில் மன்னார், முருங்கன் மகா வித்தியாலய மாணவி ஜே. யஸ்வினி (16.23 செக்.) வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார்.
கிழக்கு மாகாண வீரர்களுக்கு வெள்ளிப் பதக்கங்கள்
கிழக்கு மாகாணத்தை சேர்ந்த மாணவர்கள் இருவர் இன்றைய தினம் வெள்ளிப் பதக்கங்களை வென்றெடுத்தனர்.

14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான நீளம் பாய்தலில் நேற்றைய தினம் தங்கப் பதக்கம் வென்ற ஒலுவில் அல் ஹம்ரா மகா வித்தியாலய மாணவன் யூ. அப்துல்லா, நான்காம் நாளான இன்றைய தினம் வெள்ளிப் பதக்கம் ஒன்றை வென்றெடுத்தார்.

80 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய அப்துல்லா அப் போட்டியை 11.98 செக்கன்களில் நிறைவுசெய்து வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார

18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான தட்டெறிதல் போட்டியில் திருகோணமலை மெதடிஸ்த மிஷன் தமிழ் மகா வித்தியாலய மாணவன் வினோதன் விஹாஸ் 46.64 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM