சர்வதேச மொழிபெயர்ப்பு தினத்தை முன்னிட்டு பாராளுமன்றத்தில் விசேட நிகழ்வு

13 Oct, 2025 | 06:11 PM
image

ஒவ்வோர் ஆண்டும் செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி கொண்டாடப்படுகிற சர்வதேச மொழிபெயர்ப்பு தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற உரைபெயர்ப்பாளர் அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வொன்று பாராளுமன்றத்தின் குழு அறை இலக்கம் 2இல் செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி நடைபெற்றது.

பிரதம பாராளுமன்ற உரைபெயர்ப்பாளர் சட்டத்தரணி சீ.ஜே. கருணாரத்னவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மனித குலத்தின் இருப்புக்கும் வளர்ச்சிக்கும் மொழி எனும் சிறப்பான ஆயுதம் பயன்படும் விதம் பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டது. 

இதன்போது கருத்து தெரிவித்த பிரதம பாராளுமன்ற உரைபெயர்ப்பாளர் சட்டத்தரணி சீ.ஜே. கருணாரத்ன, மொழிபெயர்ப்பு மற்றும் உரைபெயரப்பின் முக்கியத்துவத்தை ஒட்டுமொத்த உலகமும் புரிந்துகொண்டுள்ள நிலையில் அதற்கான பெறுமதியை வழங்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை, 2017 ஆண்டு தொடக்கம் சர்வதேச மொழிப்பெயர்ப்பு தினத்தை பிரகடனப்படுத்தி அதற்கான சர்வதேச அங்கீகாரத்தை வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், 

“சர்வதேச அங்கீகாரத்தைக் கொண்ட மொழிபெயர்ப்புத் துறையின் தொழில்வல்லுநர்கள் என்ற வகையில் நாம் அனைவரும் மகிழ்ச்சியடையக்கூடிய காரணங்கள் பல உள்ளன. 

பாராளுமன்றத்தின் சட்டவாக்கச் செயற்பாடுகளில் மிகச் சிறப்பான பங்களிப்பை வழங்கிவரும் உரைபெயர்ப்பாளர்களின் வகிபாகமானது, வெறுமனே ஒரு தொழிலாக மாத்திரமன்றி அது இனங்களுக்கிடையிலும், நாடுகளுக்கிடையிலும் ஒற்றுமையை ஏற்படுத்துகின்ற, மனிதர்களுக்கிடையிலான சந்தேகத்தைப் போக்குகின்ற தொழிலாக மாறியிருப்பது நாம் அனைவரும் பெருமைப்படக்கூடிய விடயமாகும்” எனக் குறிப்பிட்டார். 

அத்துடன் பாராளுமன்றத்தின் உரைபெயர்ப்பாளர் அலுவலகத்திற்கு மொழிபெயர்ப்பாளர்களையும் சேவை இணைப்புச் செய்து, மொழிபெயர்ப்பு பணிகளை சிறப்பான முறையில் முன்னெடுப்பதற்கு பாராளுமன்றச் செயலாளர் நாயகம் சட்டத்தரணி குஷானி ரோஹணதீர உட்பட செயலாளர் குழாமும், சட்டவாக்கச் சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர்  ஜயலத் பெரேராவும் வழங்கிவரும் ஒத்துழைப்பு போற்றுதலுக்குரியதாகும் என்றார்.

இந்நிகழ்வில் பாராளுமன்றத்தின் பிரதி பிரதம பாராளுமன்ற உரைபெயரப்பாளர் ஆறுமுகம் சரவணபவானந்தன் கருத்து தெரிவிக்கையில், 

இப்புவியில் வாழும் ஏனைய உயிரினங்களை விட மனிதகுலம் பலம் பொருந்திய இனமாக தன்னை கட்டியெழுப்புவதற்கு அவனாலேயே கண்டுபிடிக்கப்பட்ட ஒப்பற்ற கருவியான மொழியைப் பற்றி மிக ஆழமாக விபரித்ததுடன், மொழிபெயர்ப்பு ஊடாக மனித குலம் நவீன  உலகில் பெற்றுள்ள சிறப்பான வெற்றிகள் குறித்து சிலாகித்துப் பேசினார்.

பாராளுமன்ற உரைபெயர்ப்பாளர் சங்கத்தின் தலைவர் சண்முகராஜா பிரதீப், உரைபெயர்ப்பாளர்களின் முன்னேற்றத்திற்கு தமது சங்கம் ஆற்றிவரும் சேவைகள் தொடர்பாக விளக்கமளித்தார். 

இதன்போது சர்வதேச மொழிபெயர்ப்பு தினத்தை சிறப்பிக்கும் வகையில் சங்கத்தின் நிறைவேற்றுக் குழுவினரால் பாராளுமன்ற உரைபெயர்ப்பாளர்களுக்கான ஒழுக்கநெறிக் கோவையின் வரைவு பிரதான பாராளுமன்ற உரைபெயர்ப்பாளரிடம் கையளிக்கப்பட்டது.

பாராளுமன்ற உரைபெயர்ப்பாளர்களின் மற்றும் மொழிபெயர்ப்பாளர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதி பிரதம பாராளுமன்ற உரைபெயர்ப்பாளர்களான ஏ.ஜி.எம். பிக்ரி, கே.டீ. ரொஹான் பத்மசிரி மற்றும் மொழி பெயர்ப்பாளரான  ஏ.எப். பயாஸ் மொஹமட் ஆகியோர் சிறப்பான கருத்துக்களை தெரிவித்ததுடன், மூத்த பாராளுமன்ற உரைபெயர்ப்பாளர் என்.பீ.சீ.ஜே. நிஸ்ஸங்க நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

11 இந்திய மீனவர்கள் கைது!

2025-11-10 16:35:49
news-image

சிறைச்சாலைக்குள் சொகுசாக இருக்கும் கைதியின் காணொளி...

2025-11-10 16:24:58
news-image

காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு!

2025-11-10 15:47:14
news-image

வடக்கு மாகாண முன்னாள் கல்விப் பணிப்பாளர் ...

2025-11-10 15:43:40
news-image

பெருந்தோட்ட சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த...

2025-11-10 15:14:44
news-image

update : தலாவ பஸ் விபத்தில்...

2025-11-10 16:16:43
news-image

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ;...

2025-11-10 13:29:34
news-image

தமிழர்களுக்கான அதிகாரப் பரவலாக்கம் நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கும்...

2025-11-10 13:28:54
news-image

அரசியல் தீர்வும் பொறுப்புக் கூறலும் :...

2025-11-10 15:16:29
news-image

தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து ;...

2025-11-10 15:01:12
news-image

யாழ். நெடுந்தீவில் கைதான 29 இந்திய...

2025-11-10 14:56:40
news-image

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மருந்து மாத்திரைகள், திரவங்கள்,...

2025-11-10 13:26:20