கொழும்பு, மருதானையில் இருந்து ஹட்டன் வழியாக வெலிமடை வரை முச்சக்கரவண்டியில் கஞ்சா, ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இரு இளைஞர்களை வட்டவளை பொலிஸார் இன்று (13) கைது செய்துள்ளனர்.
25 மற்றும் 27 வயதுடைய வெலிமடை பகுதியைச் சேர்ந்த இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மருதானை பகுதியில் வாடகைக்கு முச்சக்கரவண்டி ஓட்டுபவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஈசி கேஷ் முறையில் பணத்தை பெற்றுக்கொண்டு, வீதிகளில் அடையாளம் காணப்பட்ட சில பகுதிகளில் போதைப்பொருளை வைத்துவிட்டுச் செல்கின்றனர் என வட்டவளை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்தது.

மருதானையில் இருந்து வெலிமடை நோக்கி சந்தேக நபர்கள் முச்சக்கரவண்டியில் இன்று (13) பயணித்துக்கொண்டிருந்தபோது, வட்டவளை பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் உள்ள சோதனைச் சாவடியில் அவர்களது முச்சக்கரவண்டி நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
இதன்போது கஞ்சா, ஹெரோயின் மற்றும் ஐஸ் ஆகிய போதைப்பொருள்கள் மீட்கப்பட்டன.
இவர்கள் வசமிருந்து 4 தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளதுடன் 23 ஆயிரம் ரூபாய் பணமும் இதன்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து சந்தேக நபர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அடுத்து, கைதான இருவரையும் ஹட்டன் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM