இலங்கை கடற்படையினர், மீன்வளம் மற்றும் நீர்வளத்துறை மற்றும் யாழ்ப்பாண சிறப்புப் படையுடன் இணைந்து கடந்த பதினைந்து நாட்களில் (செப்டம்பர் 29 முதல் ஒக்டோபர் 7 வரை) உள்ளூர் நீர்ப்பரப்புகளை உள்ளடக்கிய வகையில், தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் மற்றும் வெடிபொருட்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 45 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
அத்தோடு, 11 டிங்கி படகுகள், ஒரு கெப் வண்டி, 2 மீன்பிடிப் படகுகள் ஆகியவையும் இதன்போது கைப்பற்றப்பட்டன.
அதன்படி, யாழ்ப்பாண நகர எல்லைகள் மற்றும் திருகோணமலை மலைமுந்தல், கொக்குத்தொடுவாய், போல்டர் முனை, கோகிலாய், கதிரவேலி முனை, புடுவகட்டு, பாவுல் முனை, ஓட்டமாவடி, பிளான்டன் முனை, கல்குடா, கல்லராவ ஆகிய கடற்கரைகள் மற்றும் கடற்பரப்புகளை உள்ளடக்கிய வடக்கு மற்றும் கிழக்கு கடற்படை கட்டளைகளால் நடத்தப்பட்ட இந்த நடவடிக்கைகளின் விளைவாக, சந்தேக நபர்களை கடற்படையினர் வளைத்துப் பிடித்தனர்.
பிடிபட்ட சந்தேக நபர்கள், தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள், மீன்பிடி படகுகள் மற்றும் கெப் வண்டி ஆகியவை கிண்ணியா, முல்லைத்தீவு, குச்சவெளி, லங்காபட்டுன, கோட்பே மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களில் உள்ள மீன்வள மற்றும் நீர்வளத்துறை அலுவலகங்களில் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டன.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM