இலஞ்சம் பெற உதவிய அபிவிருத்தி அதிகாரி கைது

13 Oct, 2025 | 06:35 PM
image

இலஞ்சம் பெற உதவி புரிந்த நியாகம பிரதேச செயலாளர் அலுவலக அபிவிருத்தி அதிகாரி ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் அளிக்கப்பட்டிருந்த முறைப்பாட்டுக்கமைய அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

முறைப்பாட்டாளர் வீடு ஒன்றை பெறுவதற்காக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மூலம் 10 இலட்சம் ரூபாய் நிதி உதவிக்கான அனுமதியை பெற்றுக்கொண்டுள்ளார்.

வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையால் குறித்த நிதியிலிருந்து 150,000 ரூபா தொகை முதற்கட்டமாக வழங்கப்பட்ட நிலையில், மீதமுள்ள பணத்தை பெற்றுத்தர உதவுவதாக தெரிவித்து 25 ஆயிரம் ரூபா பணத்தை  கப்பமாக பெற்றுக்கொண்ட சம்பவத்தில் பிரதான சந்தேக நபரான அபிவிருத்தி அதிகார சபையின் (தொழில்நுட்ப) உத்தியோகத்தர் கருசிங்ஹகே சுரங்க பிரசாத் சோமசிரி செப்டம்பர் 15ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையை அடுத்து திங்கட்கிழமை (13) உதவி ஒத்தாசை வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் நியாகம பிரதேச செயலாளர் அலுவலக அபிவிருத்தி அதிகாரி கிரிதரகே ரணில் நிஷாந்த ஜயவர்தன இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொக்கட்டிச்சோலையில் இருந்து வாவி ஊடாக ஆரையம்பதிக்கு...

2026-07-10 22:03:37
news-image

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம், வெலிக்கடை சிறைச்சாலையின்...

2026-07-10 18:40:05
news-image

வடக்கில் இராணுவக் குறைப்பு மற்றும் பலாலி...

2026-07-10 18:38:06
news-image

தித்வா அனர்த்த நிதி திறைசேரியில் பாதுகாப்பாக...

2026-07-10 16:11:37
news-image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் கௌரவத்தையும் உயர்த்துவதே அரசின்...

2026-07-10 20:53:55
news-image

ஒற்றையாட்சி, இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு வார்த்தையின்...

2026-07-10 14:30:42
news-image

சிறைச்சாலை வன்முறைகளைத் தடுத்திருக்க முடியும் ;...

2026-07-10 13:21:14
news-image

பொருளாதார வளர்ச்சியை இலக்காகக் கொண்டு இலங்கையின்...

2026-07-10 13:11:19
news-image

குழந்தை பிறப்பை அதிகரிக்க ஊக்கத்தொகை: நாடாளுமன்றத்தில்...

2026-07-10 16:01:53
news-image

துறைமுக நகர ஆணைக்குழுவுக்கு அதிக சம்பளம்;...

2026-07-10 14:45:23
news-image

கிழக்கு மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு உடனடி...

2026-07-10 14:31:38
news-image

கிழக்கு புகையிரத பிரச்சினைகளுக்கு நேரடி கள...

2026-07-10 15:31:04