குருக்கள்மடம் தென்னந்தோப்பில் ஆணின் சடலம்!

13 Oct, 2025 | 06:40 PM
image

மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடத்தில் உள்ள தென்னந்தோப்பிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் திங்கட்கிழமை (13) மீட்கப்பட்டதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குருக்கள்மடம் தென்னந்தோப்பில் ஆண் ஒருவரின் கடலம் கிடப்பதாக அப்பகுதி மக்கள் களுவாஞ்சிக்குடி பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கமைய ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

இந்நிலையில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.பிரதீபனின் உத்தரவுக்கமைய அங்கு விஜயம் செய்த களுவாஞ்சிக்குடி பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெத்தினம் சடலத்தை பார்வையிட்ட பின்னர், பிரேத பரிசோதனைகளுக்காக சடலத்தை களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் சடலமாக மீட்கப்பட்டவர் குருக்கள்மடம் கிராமத்தைச் சேர்ந்த 81 வயதுடையவர் என அடையாம் காணப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெருந்தோட்ட சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த...

2025-11-10 15:14:44
news-image

update : தலாவ பஸ் விபத்தில்...

2025-11-10 15:30:19
news-image

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ;...

2025-11-10 13:29:34
news-image

தமிழர்களுக்கான அதிகாரப் பரவலாக்கம் நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கும்...

2025-11-10 13:28:54
news-image

அரசியல் தீர்வும் பொறுப்புக் கூறலும் :...

2025-11-10 15:16:29
news-image

தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து ;...

2025-11-10 15:01:12
news-image

யாழ். நெடுந்தீவில் கைதான 29 இந்திய...

2025-11-10 14:56:40
news-image

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மருந்து மாத்திரைகள், திரவங்கள்,...

2025-11-10 13:26:20
news-image

கடும் மின்னல் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு...

2025-11-10 13:43:54
news-image

மன்னாரில் பீடி இலைகளுடன் மூவர் கைது!

2025-11-10 12:44:07
news-image

'முழு நாடுமே ஒன்றாக': போதைப்பொருள் சுற்றிவளைப்பில்...

2025-11-10 13:27:38
news-image

"ஹோரி சுத்தா" கைது!

2025-11-10 12:39:14