கண்டி நகரை அண்மித்த உடவத்தகெலே பகுதியில் மழை காலங்களில் ஏற்படும் வௌ்ள நீர் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கபப் பட வேண்டும் என மத்திய மாகாண ஆளுநர் தெரிவித்தார்.
கண்டி நகருக்கு மிகநெருக்கமாக உள்ள உடவத்தகெல என்ற பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் மழை நீரை முறையாக முகாமை செய்யப்பட்டால், கண்டி நகரில் மழைகாலங்களில் ஏற்படும் வௌ்ள நீரை பெருமளவுக்கு கட்டுப்படுத்த முடியும் என்பதனால் அதுதொடர்பான கலந்துரையாடல் ஒன்று மத்திய மாகாண ஆளுநர் காரியாலயத்தில் இடம் பெற்றது.
மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ்.பி.எஸ். அபயகோன் தலைமையில் நடை பெற்ற இக்கலந்துரையாடலில் ஆளுநரின் உதவிச் செயலாளர் சாமர அலஹகோன், துணைப் பிரதம செயலாளர் (பொறியியல் சேவைகள்) சனத் லியனகே, கண்டி மாநகர சபையின் நகர்ப்புற நீர்வழங்கல் பொறியாளர் டி.எம்.டி.எஸ். செனவிரத்ன மற்றும் தொல்பொருள் துறை அதிகாரிகள் குழு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில், உடவத்தகெல மழைநீர் முறையாக வடிகட்டப்படாத காலணத்தால் ஏற்படும் தாக்கத்தைக் குறைத்தல், மற்றும் இதனை செயல் படுத்துவதில் உள்ள சிக்கல்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM