ஹெரோயின் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் சந்தேக நபர் ஒருவரை அநுராதபுரம் தலைமையக பொலிஸ் நிலைய மது ஒழிப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மது ஒழிப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய அநுராதபுரம் பொலிஸ் பிரிவின் மாத்தளை சந்தி சமஹி மாவத்தை பகுதியில் 12 ஆம் திகதி நேற்று மாலை நடத்திய சுற்றிவளைப்பின் போது பெண் சந்தேக நபரை கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து 10 கிராம் 200 மில்லிகிராம் அளவுடய ஹெரோயின் போதைப் பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண் அநுராதபுரம் மாத்தளை சந்தி சமஹி மாவத்தை பகுதியை வசிப்பிடமாக கொண்ட 50 வயதுடைய பெண் என்பது ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் தலைமையக பொலிஸ் நிலைய மது ஒழிப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்டுள்ளதோடு, விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் அநுராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளார்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM